பறக்கும் காதல் பறவை

இமைச் சிறகுகளை அயராமல்
விரித்துப் பறக்கிறது
விடிய விடிய ...

காற்று என்ன உனக்கு
குத்தகைக்கு விட்டு
வேடிக்கை காட்டவோ...

உன் காதல்
சிறகுகளில் சிக்கி
விரிக்கப் பார்க்குமோ...?
மூச்சுவிடாமல்....!

நினைவுப் படகில்
நீந்தி செல்கிறாய்
நிதமும் வானவீதியில்...

உன்னை கண்ட
செயற்கை
திசை மாறியதே ஏன் ?

தொலைகிறதே மனம்
உன் மொழிப் பேச்சில்
மயங்குகிறதே கடலலைபோல் ....

ஏங்குகிறதே
உன்னோடு
பறவையாகி உயிராகிட .....

ஒன்று சேர்க்கிறது
காதல்
உன் வான் படகில
இரு உயிர் ஓருயிராகி ....

உன்னை கண்ட
கண்கள்
வேறொன்றையும் காணா ....!

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (11-Oct-14, 6:51 am)
பார்வை : 156

மேலே