புன்னகையின் அர்த்தமுள்ள மௌனம்

உன் புன்னகையின்
மௌனத்திற்கு
புத்தகத்தில் பொருள்
தேடினால் இல்லை !
உதடுகளின்
அர்த்தமுள்ள மௌனத்தின்
பெயர் அங்கே நிசப்த்தம்
சொற்கள் அங்கே
பொருளற்ற வெறுமைகள் !
மௌனம் ஒன்றே பார்த்திருக்கும்
மௌனம் ஒன்றே கேட்டிருக்கும்
நெஞ்ச நீரோடையின் சலனம்
மௌன ராகம்
அங்கே ராகங்களின்
பெயரெல்லாம் மௌனம் !
~~~கல்பனா பாரதி~~~