பொறுப்பான காதல்

யாரது யாரது என் தோட்டத்தில்
ரோஜா பூக்களை தூவியே சென்றது?
வாசனை பின் வந்தவன் உன்
வாசலில் வந்த பின் தயங்கினேன்!
உந்தன் தந்தையின் வேலையை சொல்லிடும்
பேர்ப் பலகையைப் பார்த்ததும் மயங்கினேன்!
காவல் துறையினில் பெரும் பதவியில்
காக்கிகள் புடை சூழ்ந்திட வாழ்பவர்
அவர் ஈன்ற கலர் இதுவாவென
ஒரு கணம் திகைத்து நின்றேன்!
திரும்பினேன் மனம் துவண்ட தாலே!
மீண்டுமோர் நாள் தனில் நீ கொடுத்த
மிஸ்டு காலில் மனம் குளிர்ந்தே
மனம் திறந்தேன் அழகுப் பெண்ணே!
ரோஜாப் பூ வாசம் எப்போதும்
எனக்கு சொந்தம் ஆக
வளர்த்திட்டேன் காதல் செடியை நம்
பருவ தோட்டத்தினுள்ளே!- இனி
பொறுப்பதற்கு தேவையென ஏதும் இல்லை
பொறுப்பாக நம் காதலை அவர் புரிந்திட செய்
என் காலை மிஸ்டு கால் ஆக்கிடாமல்!

எழுதியவர் : karuna (13-Oct-14, 9:20 am)
Tanglish : porupaana kaadhal
பார்வை : 135

மேலே