யாருக்கு வேணும் காதல்

பருவத்தின் பள்ளிக்கூடத்தில்
பதினாறினை அடைந்த
மைனர்களுக்கே மெஜாரிட்டி - இங்கே
கற்றுத் தருவது
காதல் பாடங்கள் மட்டுமே.
முதலில் விழிகள் மூலம்
முதல் பாடம் ஆரம்பம். - பிறகு
முத்தங்களை
முகவரியாய்க் கொண்ட
இதழ்களின் வழியே தொடர் பாடம்.
இங்கே - ஆசிரியர்கள் கிடையாது.
இணைந்தவர்களே ஆசிரியர்களாவர்.
விருப்பம் இருந்தால் - பிரிவு
விவாகரத்து இல்லாமல்
விவாகம் செய்துக் கொள்ளலாம்.
விவாகத்திற்குப் பின் - பெரியவர்களின்
விருப்பத்திற்கேற்ப புதிய
வாழ்க்கையில் வசந்தத்தோடு
வெற்றி நடைப் போடலாம்.
யாருக்கு வேணும் காதல்.

எழுதியவர் : சு. சங்கு சுப்ரமணியன். (13-Oct-14, 9:23 am)
பார்வை : 93

மேலே