வாழ்வெல்லாம் வேண்டும் உன் மடி தலைசாய்க்க 555

என்னவளே...

உன் துப்பட்டா
முனை உரசலில்...

தூளாகி போன
என் இதயம்...

உனக்கும் எனக்கும் இருந்த
இடைவெளியை நெருக்கமானது...

காற்று உன் துப்பட்டா
தீண்டலால்...

ஏதோதோ பேசிக்கொண்டு
இருகிறாய்...

ஒன்றும்
தெரியாதவள் போல...

மீண்டும் வந்த காற்று
உன் கூந்தல் கலைத்து...

மூடிவிட்டு செல்கிறது
உன் பூ முகத்தை...

உன் கூந்தல்
வாசம் பட்டு...

என் இதயத்தின்
துடிப்பு கூடுதடி...

என்னை நான் மறந்து
உன்னை ரசிக்கும் நேரத்திலும்...

புன்னகையோடு பேசிக்கொண்டு
இருகிறாய்...

உன் குரலுக்கு நான் செவி
கொடுக்கிறேனா இல்லையா
என்று தெரியாமலே...

உன் இதழ்கள் மட்டும்
அசையவில்லையடி...

உன் காதோரம் ஜிமிக்கியும்
சங்கீதம் பாடுதடி...

என் புன்னகை பூவே...

நான் உன்னை ரசித்து
கொண்டே இருக்கிறேன்...

நீயோ சிரித்து
பேசிக்கொண்டே இருக்கிறாய்...

வாழ்வெல்லாம் வேண்டுமடி
நான் தலை சாய்க்க...

உன் மடி
என் மனைவியாக.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (13-Oct-14, 4:04 pm)
பார்வை : 4043

மேலே