மழையே போய் விடு

மழையே மழையே
ஏன் நீ வந்தாய்
என கண்களின் கண்ணீர்
உன் துளிகளுக்கு பிரியமா ?
துணையுடன் வரும் இவள்
இன்று தனியாய் வந்தாள்
எனும் மகிழ்ச்சியில் வந்தாயா ?

அவன் அருகே இருக்கும் போது
நீ எனக்கு இனித்திருக்கும்
மழையே போய் விடு
அவன் அருகே இல்லை
தனிமையில் தவிக்கிறேன்

நெருப்பும் சுடவில்லை
அவன் கைப் பட்ட இடங்கள்
அதைவிட சுடுகிறதே
மழையே சூட்டை தணிக்க
வந்தாயா ?

மழையே போய் விடு
உன் குளிர்மை என்னை
ஆற்றாது அவன் கண்களின்
குளிர்மை மனதில் இருந்து
சுடுவதால்

அவன் எனக்கு பரிசாய்
தந்து போனது கண்ணீரும்
தனிமையும் தான்
நீயும் ஏதாவது பரிசளிக்க
வந்தாயா ?
மழையே போய் விடு
உன் பரிசு என் கண்ணீருக்கு
பிரியப்பட்ட மழைத் துளிகள்
என தெரியும்

உன் ஆயிரம் மின்னல் கை
வந்து தலை தடவினாலும்
நீ இடி போல் கத்தி உன்னுடன்
சேர் என எச்சரித்தாலும்
நான் உன்னுடன் இணைய
மாட்டேன்

மழையே போய் விடு
அவன் என கண்ணீர் துடைக்க
தனிமை போக்க வருவான்
என நம்பிக்கை இருக்கிறது

எழுதியவர் : fasrina (14-Oct-14, 2:02 pm)
Tanglish : mazhaiyae ppoi vidu
பார்வை : 95

மேலே