சுதந்திரம் எங்கே

அரசியல்வாதிகளின்
சுதந்திரம்
அனலாய் எரிகின்றது!!!!!

வறுமையின்
சுதந்திரம்
ஏழைகளை
வாட்டுகின்றது !!!!!

சாதி மத
சுதந்திரம்
சந்தி சிரிக்கின்றது !!!!

பெண்களின்
சுதந்திரம்
கருக்கலைப்பில் களைகின்றது!!!!

ஆண்களின்
சுதந்திரம்
ஆண் ஆதிக்கத்திற்கு வித்துடுகின்றது !!!!

உடைகளில்
சுதந்திரம்
கலாச்சாரத்தை குலைக்கின்றது!!!!!

ஊழலில்
சுதந்திரம்
உள்ளே தள்ளுகின்றது என்றோ ஒரு நாள் !!!!!

செந்தமிழின் சுதந்திரம்
சீர்குலைகின்றது
ஆங்கிலத்தின் மோகத்தால் !!!!

அளவான
சுதந்திரம்
அமிர்தனமானது !!!
அளவற்ற்ற சுதந்திரம்
ஆபாசமானது !!!!

சுதந்திரமாய் சிந்தித்து
சுதந்திரத்தை
சுதந்திரமாய்
அனுபவிப்போம் =====

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (14-Oct-14, 11:01 pm)
பார்வை : 1421

மேலே