நீ யாரடி

பெண்ணே நீ யாரடி
அந்த இரவின் நிலவா ?
உன் கண்களை கண்டால்
தீயும் பனிக்கட்டி ஆகுமே !

பெண்ணே நீ யாரடி
அந்த பூந்தோட்ட மலரா ?
உன் இதழ்கள் கண்டால்
பட்டாம் பூச்சியும் கிறங்குமே !

பெண்ணே நீ யாரடி
வலுக்கும் வலம்புரி சங்கா ?
உன் கழுத்தை கண்டால்
சீரும் பாம்பும் ஏங்குமே!

பெண்ணே நீ யாரடி
அலை பாயும் கடலா ?
உன் கூந்தல் கண்டால்
அலையும் கரைத்தொட மறக்குமே !

பெண்ணே நீ யாரடி
பாய்ந்தோடும் நதியா ?
உன் கண்ணீர் கண்டால்
மீனும் நீந்த விரும்புமே !

பெண்ணே நீ யாரடி
பறந்தோடும் அன்னமா ?
உன் கால் நடை கண்டால்
துள்ளும் மானும் மயங்குமே !

பெண்ணே நீ யாரடி
வானத்துப் பறவையா ?
உன் இடுப்பின் அசைவு கண்டால்
ஆடும் மயிலும் தோற்குமே !

எழுதியவர் : fasrina (16-Oct-14, 1:00 pm)
Tanglish : nee yaradi
பார்வை : 104

மேலே