பாவையின் பார்வையில் -----சந்தோஷ்

பாவையின் பார்வையில்...
---------------------------------------------

இன்பக்குமரன். நண்பர்களுக்கு செல்லமாக இன்பா..!
உடுத்திய உடையிலும், கையிலுள்ள செல்பேசியும் சொல்கிறது இன்பா பணக்காரன் என்று. பத்து வயது இருக்கும் போதே பத்மினி, மாருதிகளை ஓட்டி பழகியவனுக்கு கல்லூரி காலத்தில் டவேரா முதல் இன்னோவா வரை இவனுக்கு அத்துப்படி, ஆடியும, BMW யும் இலட்சியம்.


இன்பா இப்போது இன்னோவா காரை..
கோவை- சேலம் தேசிய நெடுஞ்சாலை 47ல் செலுத்தி கொண்டேயிருக்கிறான். எங்கே செல்கிறான் ?
----------------

”குருவாயூரப்பா குருவாயூரப்பா நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி” எஸ்.பி பாலசுப்ரமணியம் தன் குரலில் பலரை வசப்படுத்திய பாடல் இப்போது இன்னோவா காரில் இன்பாவிற்காக ஒலிக்கிறது. இன்பா வின் வாயில் கிங்க்ஸ் சிகரெட். காதில் இளையராஜாவின் இசை..
அடை மழை பெய்யும் போதெல்லாம் இன்பா, இன்னோவை எடுத்து இளையராஜா பாடல்களின் துணையோடு எங்கேயாவது செல்வது வழக்கம். அது அவனுக்கு பிடிக்கும். இப்படியான ரம்மியமான சுகத்தை தேடி பிடிக்கும் போதெல்லாம் அவன் பிடிப்பது சிகரெட். மனதில் படிப்பது அந்த காந்த விழியாளின் அழகு சீக்ரெட்.

காரில் இருக்கும் இன்பாவின் காதில் குருவாயூரப்பா ஒலித்துக்கொண்டிருக்கிறது...

”தேனாற்றங்கரையில் தெய்வீகக்குரலில் நாந்தானே ஒரு பாட்டிசைத்தேன்
தினந்தோறும் இரவில் நடு ஜாம நிலவில் நாந்தானே அதைக் கேட்டிருந்தேன் “

“ வாவ் .... வாவ்..... பாலு நீ கிரேட்ய்யா.... என்னா ஒரு மெஸ்மெரிசம் வாய்ஸ்.....! “ யாருமில்லாத காரில் யாரிடமோ சொல்வதுப்போல எஸ்.பி பாலசுப்ரமணியத்தை வாய்விட்டு பாராட்டுகிறான்.
ஒரு பாடலை ரசிப்பது என்பது வெறுமனே மனதை கிளர்ச்சி செய்வதால் மட்டும் வரும் ரசனையல்ல. அந்த மனக்கிளர்ச்சியில் நம்மையும் அறியாமல் அறிந்திருப்போம்.... பாடல் வரிகள், வரிகளிலுள்ள அர்த்தங்கள், வரிகளை மெட்டுக்கோ, மெட்டுக்கு வரிகளையோ அழகாக கோர்த்த கவிஞர்களின் கற்பனைகள். பாடகர் அந்த மெட்டையும் பாடல் வரிகளையும் அற்புதமாக வெளிக்காட்டும் பாவனை ஸ்ருதி , ஸ்வரங்களின் நுணக்கங்கள். பிண்ணனி இசையில் வரும் இசைக்கருவிகளின் சங்கீத சங்கதிகள். இவற்றை எல்லாம் அழகாக வெளிக்கொணரும் இசை பிரம்மாக்கள் எனும் இசையமைப்பாளர்களின் மந்திர சுந்திர ஜாலங்கள்.. என நம் ரசனைகள் ஒரு பாடலில் என்ன என்னவோ தேடச்சொல்லும் தேடி இசைத்தேனை பருகத்துடிக்கவைக்கும். அப்படிப்பட்ட ரசனைக்காரன் தான் இன்பா.



குருவாயூரப்பா முடிந்தது. சொர்க்கத்தின் வாசற்படி திறந்தது இன்பாவிற்கு. அடுத்த பாடலாக ஒலித்தது.
==சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
==பெண்ணல்ல நீயெனக்கு வண்ணக் களஞ்சியமே

பல்லவிக்கு முன் வரும் சாக்ஸாபோன் இசையில் மயங்கியே விட்டான் இன்பா. “ ராஜா நீ மனுசனே இல்லய்யா.. எங்கய்யா பிடிக்கிற இந்த டியூனைலாம்.. லவ் யூ டா ராஜா “ இளையராஜாவின் மீதான பக்தியில் பற்றிக்கொண்ட ரசனை தீயோடு பற்றவைத்தான் ஒரு சிகரெட். ஸ்டெயரிங்கில் இருக்கவேண்டிய இன்பாவின் கைகள் சிகரெட் பற்ற வைப்பதில் கவனம் செலுத்த. இவனின் காருக்கு முன்னே சென்ற லாரி சமிக்கைஞயிடாமல் இடது புறம் சட்டென்று திரும்ப, தீடிரென்று சுதாரித்த இன்பா-வின் கால்கள் சடாரென ப்ரேக் போட , ஒரு பெரும் விபத்திலிருந்து காத்து தான் சொர்க்கத்திற்கு செல்லும் பாதையை தவிர்த்துக்கொண்டான்.

இதற்கெல்லாம் அலட்டிக்கொள்ளாத இன்பா.. இளையராஜாவின் இசையில் மீண்டும் மூழ்கினான். பாடலில் வாலியின் வரிகளை இவன் வாய்கள் அசைப்போட, புகைக்கும் சிக்ரெட் இன்பாவின் இதழ் இழுப்பில் செத்துக்கொண்டிருக்கும் அந்த நேரத்தில் அந்த வரி ஒலித்தது.

==கண்ணே உன் கண்ணென்ன வேலினமோ
==கை தொட்டால் மெய் தொட்டால் மீட்டிடுமோ.
----------------------“ ஊ.....!! வாட் எ லைன் .. எவ்வளவு அழகான வார்த்தைகள். வாலி வாலிதான் டா “ இன்பாவின் நினைவில் கடந்தகால நினைவுகள் ஆட ஆட அடுத்த வரியில்.. கயல்விழியே பாடும் வரியாக அவனுக்கு தோன்றியது.

==கோட்டைக்குள் நீ புகுந்து வேட்டைகள் ஆடுகிறாய்.
==நானிங்கு தோற்றுவிட்டேன் நீயென்னை ஆளுகிறாய்.

“ம்ம்ம்ம்ம் யெஸ் அவள் மனக்கோட்டையில் புகுந்து வேட்டையாடிய மன்மத வீரன் நானல்லவா...........? “ முன்னோக்கி செல்லும் காரின் கண்ணாடியில் தெரியும் கானல் நீரில் திரையிடப்படுகிறது இன்பாவின் பின்னோக்கி சென்ற நினைவுகளை..!

“கயல்..! “

“இன்பா.... சொல்லுப்பா. இப்போதான் வந்தீயா.சாரி கவனிக்கல. இளையராஜா சாங்க்ஸ்ன்னா எனக்கு உயிர் இன்பா... அதான். ஹி ஹி “

“ இட்ஸ் ஒகே கயல். ராஜாவின் மெட்டுக்களை ரசித்த. இந்த ரோஜாவின் மொட்டுக்களை நான் ரசிச்சேன். “

“ ஹே... டபுள் மீனிங்கல பேசாதேன்னு.. எத்தனை தடவ சொல்லியிருக்கேன். அடிவாங்கப்போற படுவா.. “ கயல், இன்பாவின் தலையில் கொட்டுவைக்க எத்தனிக்க, இன்பா ஒரு ஓரமாக ஒதுங்க. காற்றில் தன் கைகளை தாலாட்டிக்கொண்டே தடுமாறி இடறி விழந்தாள்.

“ கயல்.................!! பார்த்தும்மா.. சாரி டா கயல். நான் தான் ஒதுங்கிட்டேன். பார்த்து.. பார்த்து. எழுந்திரு.. “

“ லூசு இன்பா. நான் எங்கப்பா பார்க்கிறது. என் பேரு கயல்விழி. ஆனா ஹா ஹா ஹா உனக்குத்தான் தெரியுமே.”
------------------------------
கயல்விழி...!
மாநிற தேகம், ஒல்லியும் இல்லாத குண்டும் இல்லாத உடல்வாகு. சராசரியான கூந்தல் நீளம், அளவான நடையழகு, தெளிவான பேச்சு, அழகான விழி ஆனால் விழியில் ஒளி இல்லை. இன்பாவின் சாப்ட்வேர் அலுவகத்திற்கு வேலைக்கு வந்த சந்துருவின் தங்கைதான் கயல். குரல்வளம் நன்றாக இருப்பதாலும், சங்கீதம் பயின்றதாலும் மேடைப்பாடகியாக தன் வாழ்க்கையை மகிழ்ச்சியாக கழித்து, களித்துக்கொண்டிருந்த கயலுடன் பழகி பழகி நெருங்கிய தோழனாகிவிட்டான் இன்பா.
பொதுவாக்வே பார்வையற்றவர்கள் பார்வைபுலன் இழப்பால் முகத்தில் பாவனையை இழந்துவிடுவார்கள். முக லட்சணத்தில் ஒரு அசாதாரண மாற்றம் இருக்கும். ஆனால் கயல்விழி கேட்டல், உணர்தல் திறனால் முகத்தை சராசரி பெண்ணை விடவும் அழகாக வைத்திருந்தாள். இந்த வசீகரத்தில் தான் வீழ்ந்தான் இன்பா.
------------------------


” கயல்..! ஒரு கவிதை சொல்லட்டுமா “ இன்பா தன் காதலை வெளிப்படுத்தும் நோக்கில் எடுத்த அவதாரம் தான் இந்த கவிஞன் வேடம்.

“ இன்பா.. கவிதையா.....நீயா....? இரு இரு காதுல பஞ்சை வச்சிக்கிறேன். “ கயல் கேலியாக பேசினாலும் அவன் சொல்லும் கவிதையை உள்வாங்க ஆயுத்தமானாள். “ ம்ம்ம் சொல்லுங்க சார் . கேட்கிறேன். “

விழியாளே..!
பாவை உனக்கு நான்
பார்வையாகிறேன்
பாவி எனக்கு நீ
காதல் பாதை தருவாயா?

தருவாய் என்றால்
நம் இல்லறவாழ்விற்கு
தருகிறேன் என் விழிகளை..!
இல்லை என்றால்
அந்த நரகத்திற்கு
தானாமாக்கிறேன் என் உயிரினை...!




” வாவ்வ்வ்வ்வ்.. சூப்பர் இன்பா... யார்கிட்ட கவிதை கடன் வாங்கின..?? “ கயல்விழி இன்பா சொல்வதன் அர்த்தங்களை புரிந்தாலும், வெளிக்காட்டாத போல கிண்டல் செய்கிறாள் என உணர்ந்த இன்பக்குமரன்.

”கயல்.. உன்னை நினைச்சேன்.. தானா வந்துச்சு. சரி உன் பதில் என்ன.? ஐ ம் இன் லவ் வித் யூ “

“ ஹா ஹா ஹா ஹா ஹா ... என்னங்கடா நீங்க...! காதலை சொல்லும் போது இங்கிலீஷா.? ”காதலிக்கிறேன் அன்பே..” அப்படீன்னு தமிழ்ல சொல்லுங்கப்பா... உங்கள் காதல் வெற்றிப்பெறும்.. ம்ம்ம்ம்ம்ம் ” சற்றே கேலியாகவும் மெலிதாக புன்னக்கைத்தே தன் காதலை மறுக்க ஆரம்பிக்கிறாள் என உணர்ந்தவனாக இன்பா
“ கயல் .. உன்னை எனக்கு பிடிக்கும் பா. உனக்கு பார்வை இல்லைன்னா என்ன? நான் இருக்கிறேன்.. என்னை நம்புமா. எனக்கு என்ன வேற பொண்ணா கிடைக்காது.? பட் உன்கிட்ட நான் ஏன் லவ் சொல்லனும். உன்கிட்ட ஏன் இப்படி நான் பின்னாடி அலையணும்? “

“ ஓ ஓஹோ... தலைவர் இதுவரைக்கும் என் கூட சுத்தினது, பேசினது, பழகினது எல்லாம் என்னை லவ் பண்ணனும்ன்னு முடிவு பண்ணித்தானோ..? அப்படின்னா இதுவரைக்கும் இன்பா- கயல் ப்ரெண்ட் ஷிப் ல தூய்மை இல்லைன்னு சொல்றீங்க இன்பா. அப்படித்தானே..?
என்ன இன்பா.. உன்கிட்ட நட்பா இருக்கும் போதே நீ உண்மையில்லன்னு தெரியுது. நான் எப்படி உன்னை நம்பி காதலிக்க முடியும்.? அண்ட் நானோ குருடி .. நீயோ பலபல சொத்துகளுக்கு அதிபதி. என்னை உன் வீட்டுல ஏத்துப்பாங்களா ? ஆமான்னு சொல்லாதே.. பிராக்டிக்கலா வாழ டிரை பண்ணு.

என் குறையை நீ காதலிக்கிற. என் இளமையை நீ காதலிக்கிற ஆனா என்னை நீ காதலிக்கவே இல்ல. இன்பா. சாரிப்பா .. இனி நம்ம ப்ரெண்ட்ஷிப்பும் தேவையான்னு நான் யோசிக்கனும் இன்பா. .. ”


“ கயல்... வாட் திஸ்..? நீ பாட்டுக்கு என்ன என்னமோ பேசுற..? ஒகே நீ சொல்வதுமாதரி உன்னை காதலிக்கனும்ன்னு முடிவு பண்ணித்தான் உன்கிட்ட பழகினேன்னு வச்சிக்கோ. ஆனா. இதுவரைக்கும் என் பணக்கார வாசமோ, என் விரலோ உன்னை மீறி , உன் மேல பட்டிருக்குமா ? ஏன் இப்படி.. எடுத்தே கவிழ்த்தேன்னு பேசுற.. இப்போ என்னாச்சு.ன்னு ரிலேசன் ஷிப் கட் பண்ணுற மாதிரி பேசுற கயல்.”

“ ப்ளீஸ் இன்பா.. என் மனசை நீ புரிஞ்சுக்கல. வேண்டாம். கொஞ்ச் நாளைக்கு நாம பேசாமா இருக்கலாம். நீ கிளம்பு, மழை வருதுபோல.. ம்ம்ம் எப்போதும் போல உன் இன்னோவை ஓட்டிட்டு போ.. என்னை இப்போதைக்கு விடு.”

இன்பக்குமரனின் மனதில் “ டேமிட்.. இந்த பொண்ணுங்க எப்போ எந்த நேரத்தில் எப்படி ரியாக்ட் பண்ணுவாளுங்கன்னு தெரியல... போதுமடா சாமி.. இவளுங்க சகவாசமே வேண்டாம். ஆ ஊன்னா புரிஞ்சுக்கலன்னு பேசுறாளுங்க.... ”

”ஒகே மேடம்... . நாளை கழிச்சு ஐ ஆஸ்பிடலுக்கு ஒரு ஸ்பெஷல் டாக்டர் வருகிறாராம். உன் அண்ணனை கூட்டிட்டு போ. இதெல்லாம் நான் உன்கிட்ட எதையும் எதிர்ப்பார்த்து பண்ணலைங்க மேடம். நீங்களும் ஆம்பிளைங்க மனசை புரிஞ்சிக்க டிரை பண்ணுங்க. ஒகே நான் போறேன். “ இன்பா

” ம்ம்ம்ம்ம்ம் முடிஞ்சா போறேன்” கயல்

என்ன சொன்னாலும் ஒரு திமிர்லதான் இருக்கா ...இடியட்...........................!

---------------------------------------------

” ராஜா ராஜா .. ராஜாதி ராஜா இந்த ராஜா.. கூஜா.... “ அக்னி நடத்திரம் ... கானல் நீரிலிருந்து காரில் ஒலிக்கும் பாடலுக்கு இன்பாவை நினைப்படுத்தி மீட்டது . மீண்டும் ரசனை, மீண்டும் சிகரெட். மீண்டும் காரின் ஸ்டெயரிங்கில் இல்லாத கைகள் சிகரெட்டை பற்ற வைப்பதில் கவனப்பட.. இன்பாவின் பாதை திசைமாறியது. -----------
கோவை பிரபல கண் மருத்துவமனையில்.... கயல்விழிக்கு மாற்று கண்கள் பொருத்தும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த மூன்றாவது நாள்
இன்பக்குமரனை தொடர்புக்கொண்டு சோர்ந்துவிட்ட கயலுக்கு புத்துணர்ச்சி கொடுத்தது அந்த பாடல்..

“ ஓ பட்டர்ப்பிளை ... பட்டர்ப்பிளை ஏன் விரித்தாய் சிறகை...


கயல்விழி அருகிலிருந்த மேஜையில் இருந்த தினத்தந்தியில் ஒரு பெட்டி செய்தி.
** பவானி பை பாஸ் அருகே கார் விபத்தில் பலியான வாலிபர் தனது கண்களை தானம் செய்திருப்பதால் அவரின் கண்கள் மூன்று நாட்களுக்கு முன்பு பார்வையற்ற ஓர் இளம் பெண்ணுக்கு ஒலியையும், பிரகாசமான வாழ்க்கையையும் கொடுத்தது. கண் தானத்தின் அவசியத்தை உணர்ந்திருந்த அந்த வாலிபரின் பெயர் இன்பக்குமரன். **

பட்டாம் பூச்சி பாடல் .. கயலின் விழியிலும் இருதயத்திலும் என்னவோ செய்ய ஆரம்பித்துவிட்டது.

==மலர்கள் தோறும் நடந்து போகும் சிறிய ஜீவனே
===உந்தன் மனதை கொஞ்சம் இரவல் கேட்கும் எந்தன் ஜீவனே
=====விழிகள் நூறு கடிதம் போட்டும் பதில்கள் இல்லையே....

எதோ ஒரு குற்ற உணர்ச்சியில் ஒரு வித மன அயர்ச்சியில் இருந்த கயலின் காதில் கேட்டது அந்த கவிதை.........!

ஜனனமாகி விடுவேன்
என்ற நம்பிக்கையோடு
மரணித்துவிட்டேன் அன்பே..!
என் விழிகள்
உன் பார்வையாகட்டும்.
உன் பார்வைகளில்
என் ஜீவன் வாழட்டும்.

உன் வாழ்வில் நான் இல்லை
என்றாலும்
உன் விழியில் நான் இருக்கிறேன்.

கவனம் கயலே..!
உன் உயிரில்
நான் வாழ்கிறேன்.
பத்திரம் பத்திரம்
என் விழியாளே...!
என் விழிகளை ஆள்பவளே..!

----

-இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (16-Oct-14, 9:00 pm)
பார்வை : 369

மேலே