காதிருந்தும் செவிடர்கள்
மழை பெய்யும் ஓசையும்
தரைவிழுந்து செய்யும் ஓசையும்
கலந்து கேட்ட போது
என் காதுகளில் இன்னும் சில ஓசைகள்...
மின்விசிறியின் சுழற்சி ஓசை..
அடுப்படியில் தட்டு உருட்டல்...
இதை நானே வாசிக்கும் மெல்லோசை
அப்பப்போ வடிகட்டிய இடியோசை...
இது எதையும்
கேட்டும் கேட்காதது போல்
தட்டச்சு செய்யும் போது
உண்டாகும் விசைஅழுத்து ஓசை
மெல்லிதாய் மூச்சின் ஓசையும்....