சாத்தான்

நட்ட நடு
ராத்திரி
கொட்டும்
மழை....
தொலை தூரத்தில்
ஓநாய்களின்
ஊளைச்சத்தம்...
அருகில்
ஆந்தைகளின்
ஆலறல்....
இடையிடையே
எட்டிப்பார்க்கும்
பயம்...
சரசரக்கும்
இலைச்சருகு
சலசலக்கும்
சதங்கை மணி...
தீடீரென்று
திசைத்திருப்பும்
கூதல்காற்று....
வறண்ட தொண்டை
நனைக்கும் எச்சில்
முகத்திரையில்
விளையாடும்
வியர்வை...!
உடம்பை
எரிக்கும்
உஷ்ணம்
எட்டுத்திக்கையும்
அலசும்
கண்கள்
அண்டவெளிக்கும்
பாதாளத்திற்கும்
பயணிக்கும்
மூச்சுக்காற்று
குறுக்காக
நடக்கும்
நிழல்போல்
ஓருருவம்...!
கடவுளின்
பெயரை
உச்சரிக்கும்
உதடு....!
செக்கனையும்
எட்டிப்பிடிக்கும்
இதயத்
துடிப்பு...!
வாய்விட்டு
வரமறுத்த
வார்த்தைகள்
யுகங்களாய்
உறைந்திருந்த
வாழ்க்கையில்
மானிட வரவுஉணர்ந்து
திக்கற்றுப் பறந்திருந்தது
சாத்தான்.........