நரகாசூரனும் நாணுவான்

காசைக் கரியாக்குவது
உங்கள் உரிமை
(உழைப்பால் வந்ததோ
உழைக்காமல் வந்ததோ)
காதைப் பிளக்கும்
ஓசையை எழுப்பும்
பட்டாசு வெடித்து
மத்தாப்புக் கொளுத்தி
சுற்றுச் சூழல் பாதிக்க
சுற்றியுள்ள உயிரனங்கள்
அதிர்ச்சியில் உறைந்துபோக
எந்தக்கடவுள் கட்டளையிட்டார்?

நரகாசூரன் அழிந்தும்
அவனை மிஞ்சும்
நரகாசூரர்களாய் மாறி
நிகழ்காலம் எதிர்காலம்
இரண்டையும் அழிக்கவா
எல்லோர்க்கும் தீமைதரும்
தீபாவளி வெடிகள்?

நரகாசூரனும் நாணுவான்
அறிவியலை அழிவியலாக்குதற்கு

எழுதியவர் : மலர் (17-Oct-14, 2:03 pm)
பார்வை : 120

மேலே