என்றும் தீருமோ என் காதல் தாகமே
தினம் தினம் கனவுகள் தருகிறாய்
கானல் நீராய் தெரிகிறாய்
தாகம் தீர்க்க முடியாமல்
என்னை தவிக்க விடுகிறாய்
இருந்தும் நீ தரும் வலியெல்லாம்
இன்னும் வேண்டிட கெஞ்சுதே
காதல் சொல்ல உன்னிடம்
வார்த்தை வந்திட அஞ்சுதே
என்றும் தீருமோ
என் காதல் தாகமே
உன் சம்மதம் வந்தால்
வாழ்க்கை ஆரம்பம் ஆகுமே