என் நெஞ்சில் நிற்பவள்
என் நெஞ்சில் பதிந்தவளே
உன்னை காதலில் ஜெயிப்பது
என் நோக்கமில்லை என் வாழ்வில்
நீ வேண்டும் என்று தான் நினைத்தேன்.
நீ அழகானவள் என நினைத்ததற்காகவா
என்னை அழவைத்து பார்க்கின்றாய்!
என் அழுகையின் அர்த்தம் புரியாதவளே.
உன் இதயத்தில் நான் இன்று இல்லை.
என் இதயத்தில் நீ தானேடி என்றும்
.இந்த ஜென்மத்தில் நான் கண்ட பொக்கிஷம் நீயடி
உன் பூ முகமும் தூரிகை உதடுகளால் வரைந்த உன்
புன்னகையும் காலங்கள் கடந்தாலும் நினைவூட்டுமடி!