பெண் இரவில் தனியாய்

பொதிமூட்டை
கல்வி இங்கு ஏனடா?
இது தானா தொழிற் கல்வி கூறடா?
சாதி என்னும்
பிரிவு இன்னும் ஏனடா?
நிலா மரமென்ன
சாதி என்று கூறடா?-மக்கள்
ஆட்சி என்பதிங்கு என்னடா?
ஆட்சி மட்டும் போதுமென்று சொல்வதா?
மொழி பற்றென்று
சொல்வதெல்லாம் ஏனடா?
அதை நித்தம் சொல்லி
மொழி மறந்தோம் பாரடா?
வளர்ச்சி மட்டும்
வந்ததென்று மானிடா
வந்த ஏழ்மை மறந்து
போனதென்ன மானிடா?
பணவீக்க எற்றமின்று ஏனடா?
இன்னும் ஏழைக்கு உணவில்லை பாரடா?
இலவசங்கள் பலவும்
உண்டு கேளடா உணவிற்கேல்லாம்
விலைவாசி ஏற்றம் தான்.
தொழிற்நுட்பம் எல்லாமிங்கு
உண்டடா - இன்று
நாகரிகம் மெல்ல மறந்தோம் பாரடா!
கனவு மட்டும் காண்பதிங்கு ஏனடா?
மனதில் எண்ணமொன்று
தோன்றும் போது தானடா.
ஏற்ற தாழ்வு என்ற
சொற்கள் இன்னும் ஏனடா?
நீ தாழ்ந்து வந்த
பாதையினால் ஏற்றம் தான்.
பிரிவு என்ற நிலைகள் இன்றும் ஏனடா?
பிரிவை மாற்றிடாத கல்வி என்றும் வீனடா!
வாய் வார்த்தை சுதந்திரம் - இனிமை தான்
பெண் இரவில் தனியாய் செல்லும் போது
உண்மை தான்!


எழுதியவர் : கவிசதிஷ் (17-Jun-10, 9:09 am)
சேர்த்தது : கவி ப்ரியன்
பார்வை : 705

மேலே