அசுவ சாஸ்திரம் குதிரை சாஸ்திரம்

குதிரைகளை வளர்க்கும் முறைகள், வாங்கும் போது பார்க்க வேண்டிய சகுனங்கள்,கவனிக்க வேண்டிய சுழிகள், வரும் வியாதிகள்,வைத்திய முறைகள் என குதிரையைப் பற்றிய விளக்கமான ஒரு தமிழ் நூலை சமீபத்தில் பார்க்க நேரிட்டது .

தண்ணீரை உறிஞ்சி குடிக்கும் விதத்திலேயே அவைகளின் ஜாதியை கண்டறிகிற நம்மவர்களின் அறிவுத்திறம் ....அபாரம்.

"சுழி சுத்தம்" என்பார்கள்..குதிரையின் உடலில் காணப்படுகிற அந்த சுழிகளுக்கு இத்தனை முக்கியத்துவமிருப்பதும்,அதையும் கண்டறிந்து நமக்கு அறிவுறுத்தியிருக்கிற நம் முன்னோர்களின் ஆராய்ச்சித்திறனும் வெகு அருமை. நாமும் தலைவிதி,லிபி,தலையெழுத்து...இதெல்லாவற்றையும் ஏன் கொஞ்சம் நம்பக்கூடாது ..? என்று யோசிக்க வைக்கிறது.

ராஜா தேசிங்கின் "நீலவேணி"யும், உலகையே வென்ற மாமன்னன் அலெக்சாந்தரின் "பிளாடிபஸ்" ஸும் , பாலகுமாரனின் குதிரை புராணமும்.. குதிரையின் சிலிர்ப்பாய்... எழுந்து மறைகின்றது....

முன்னாள் குடியரசுத்தலைவர் ராதாகிருஷ்ணண் ஒருமுறை மேற்கத்திய நாடுகளுக்கு பயணித்தபொழுது " நாங்களெல்லாம் ஒரே மாதிரி வெள்ளையாக இருக்கிறோம் .இந்தியர்கள் நீங்கள் மட்டும் பல நிறங்களில் இருக்கிறீர்களே?! ஏன்? " என கிண்டலாக யாரோ ஒருவர் கேட்க , அதற்கு அவர் " கழுதைகளெல்லாம் ஒரே மாதிரிதான் இருக்கும்; ஆனால் குதிரைகள் அப்படி அல்ல...கறுப்பு,சிவப்பு,வெளுப்பென்றுவேறு,வேறு வர்ணமாகத்தான் இருக்கும்... என்றாலும் கழுதையும்,குதிரையும் ஒன்றாகவிடுமா ?" என்றாராம். என்ன ஒரு சமயோசிதம்?

குதிரைகளுக்காக சாஸ்திரமே எழுதிய தேசமும் இதுதான். அதேசமயம் "கழுதைகளுக்கு கல்யாணம் செய்தால் மழைவரும்" எனும் மிகப்பெரிய (?!) கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்திய தேசமும் இதுதான்...அறிவின் உச்சத்தையும், அறிவீனத்தின் மிச்சத்தையும் ஒருசேர தரிசனம் செய்யமுடியும்..என் தேசத்தில்.. !!

மனக்குதிரை கட்டுக்கடங்காமல் ஓட ஆரம்பித்தது..... இனி, அடங்கவே அடங்காது ..!!

எழுதியவர் : முருகானந்தன் (21-Oct-14, 10:53 pm)
சேர்த்தது : MURUGANANDAN
பார்வை : 541

சிறந்த கட்டுரைகள்

மேலே