ஏமாற்றம்

இனியவனே ! என் காதல்
சொல்ல பல தடையிருந்தும்
என் கடுங்காவல் உடைத்து
காற்றாக வந்தேன்
என் காதல் சொல்லவே

உன் காதல் சொன்னதும்
என் காதல் சொல்ல பல
தயக்கங்கள் எனக்கிருந்தும்
பல ஊர்கள் கடந்து
பறவையாய் வந்தேன்
என் காதல் சொல்லவே

உன் பெயரும் என் பெயரும்
உன் உயிரும் என் உயிரும்
ஒன்றுடன் ஒன்று இணைய
நதியாக வந்தேன்
என் காதல் சொல்லவே

பிறந்ததன் அர்த்தம் புரிய
பெண்மையின் வெட்கம் உணர
மழையாய் வந்தேன்
என் காதல் சொல்லவே

பல ஆசைகளுடன் உன்னை
தேடி வந்தேன்
உன்னை கண்டும் கொண்டேன்
மணமேடையில் என்
நண்பியின் கணவனாக ...

எழுதியவர் : fasrina (23-Oct-14, 9:38 am)
Tanglish : yematram
பார்வை : 148

மேலே