ஒ இது மழை காலமா
லொக்கு லொக்கு இருமல்
தொண்டையை கடிக்கும் குரல்கள்
தைல குப்பிகளின் பலே வியாபாரம்
கொசு மட்டைகளோ பல வண்ணங்களில்
தூசி தட்டி எடுக்கப்பட்டன குடைகள்
குளியலறையில் எப்பொழுதும் வெந்நீர்
பள்ளத்தில் எல்லாம் தவளை ராகம்
பார்த்து பார்த்து சாலையில் நடன நடை
வெள்ளை சட்டைகள் எல்லாம் கறைகள்
ஒ ! இது மழை காலமா?

