கனவுக்காரியின் மெளனமொழி -சந்தோஷ்

----------------------------------------------
சந்தனம் இவள் அங்கம்
குங்குமம் இவள் வெட்கம் -என்னோடு
சங்கமம் இவள் மோகம்.

செங்கதிர் முகத்தில்
பொங்கல் இவளுதடு -கள்ளியவள்
சங்கு கழுத்தில்
மயங்கும் என்நாணம்

வெட்கச்சீலை
பொத்தி வைத்திருக்கிறது
மிரட்டிடும் இவள்
இளமை இரகசியோவியத்தை..!

மின்னிடும் விழிப்பார்வையோடு
என் காந்த விழிகளை
அழைக்கிறாள் ஒரு
காதல் போருக்கு..!

சுண்டியிழுக்கும் மூக்கினை
சுழித்துசுருக்கி வம்பிழுக்க
சில்மிஷமிடுகிறாள் ஒரு
மோக மோதலுக்கு...!

உறுதியான உண்மையான
மீசைதானோ?
ஆசையோடு கடித்து
சோதிக்கவேண்டுமாம் அவள் உதடுகள்.!

வாஞ்சையோடு என்
நெஞ்சத்தில் நர்த்தனமாட
கேட்கிறதாம் அவள் விரல்கள்..!


மஞ்சத்தில் அவள் எனக்கு
தலைமையேற்று விரததாபத்தின்
பஞ்சத்தை ஒழிக்கவேண்டுமாம்..!

கெஞ்சிக்கூட கேட்காமல்
கொஞ்சியும் மன்றாடமால்
கொஞ்சமும் நாணாமல்
என்னை மிரட்டுகிறாள்.
இந்த கவிதைநாயகி..!

ஒரு மெளன உரையாடலில்..!
என் கனவு தேசத்தில்....!

-----------------------------------

-இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (26-Oct-14, 8:09 pm)
பார்வை : 274

மேலே