இளைஞனே வா

தடையை உடைத்தே திடமாய் எதிர்த்து
*****உடைவாள் உருவி -வருவாயே
அடைந்த மகிழ்ச்சி முடியும் முனமே
*****கவலை தொடரும் -அறிவாயே
படையின் துணையில் கிடைக்கும் பலமும்
***** தனியே முயன்றால் -முடியாதோ
நடையில் நடுங்கா துணிவின் துணையால்
*****நடத்தி டலாமே -உணர்வாயே
அடைத்தக் கதவும் திறக்க உடைத்து
******அடிமைத் தளையை -அறுப்பாயே
கிடைக்கும் சொகுசில் திளைக்கும் இளமை
*****அறிவை சிதைக்கும் -இளையோனே
விடைகள் தெரிந்த வினாக்கள் எதற்கு
***** விரிந்த உலகை -வளமாக்கு
அடைவாய்த் தெளிவைத் திறனை வளர்ப்பாய்
*****தினமும் புதுமை -உருவாக்கு

எழுதியவர் : அபி (27-Oct-14, 10:32 pm)
பார்வை : 91

மேலே