ஒளி காண்போம்

மறையோதி மனத்திலின்பம் தினந்தேடி திருவருளை
*****மறக்காது நினைப்பவரை -அணுகாதே
குறையேதும் அறிந்திடுநீ குழம்பாதே சிறுமனமே
*****குதிக்காதே படைத்தவனை -மறவாதே
நிறைவாக நிதம்பணிந்து இறைவாதா கருணையென
*****நிசமாக இரந்திடவே -சுகமாவாய்
கறைபோகும் உளந்தெளியும் சஜுதாவில் தலைநிலத்தை
*****கனமாக தழுவிடவும் -நிதமேநீ
இறையோடு இணக்கமுடன் உரையாடும் தொழுகையினில்
*****இகத்தோடு பரத்தினையும் -தொலைத்தேதான்
உறவாடி உனதுநலன் உருவாக்க உதவிடுக
*****உயர்ந்தோனே எனஉருக -செழிப்பாவாய்
சிறைபோன்ற உலகிதனில் சிலகாலம் தவித்திடுதல்
*****சிதைக்காமல் உனதுமனம் -விழிப்பாவாய்
முறையாக அபிஎனும்நான் முழுதாக உரைத்திடுமிவ்
*****வழியாலே இருள்விலகி -ஒளிகாண்பாய்

எழுதியவர் : அபி (28-Oct-14, 12:00 am)
பார்வை : 86

சிறந்த கவிதைகள்

மேலே