பேராண்மை

ஒருவரை ஒருவர் ரத்தம் சொட்ட சொட்ட உருண்டு பிரண்டு சண்டை இட்டு கொண்டதை என் நண்பர்கள் சிலர் ரசித்து பார்த்து கொண்டிருந்தார்கள் .. சண்டைல அப்படி என்னடா இருக்கு ப்ளீஸ் அந்த சேனல கொஞ்சம் மாத்துங்கட என்ற நானும் என் நண்பனும் கூறிய போது யோசிக்காமல் ஒரு நண்பன் அந்த அற்புதமான வாக்கியத்தை உதிர்த்தான் "ஆம்பிளைன இதெல்லாம் பார்க்கணும்ட" என்றான்..

இந்த எண்ணத்தை உருவாக்கியது நம் சமூகம் தான் ..நம் சமுதாயத்தில் முரட்டு தனத்தோடு சிரித்து பேசாமல் கனத்த குரலோடு இருப்பதாய் ஆண் தன்மை என்ற எண்ணம் பல ஆண்டு காலமாக பரவிக்கிடக்கிறது.தவறை ஒப்புகொள்வதும் மன்னிப்பு கேட்பதும் ஆண் தன்மை இல்லை அதிலும் பெண்ணிடம் கேட்பது ஆண்மை அற்றவன் செயல் என்று இந்த சமூகம் கருதுகிறது.

அலுவலகத்தில் சிரித்து பேசி வேலை வாங்கும் நடு வயது உடைய ஆண் வீட்டிற்கு வந்தால் அப்படியே அந்நியனாய் பக்கத்துக்கு வீட்டுக்காரனை போல் உருமாறுகிறான்.பேருந்து படி கட்டில் தொங்கி செல்வது தான் ஆண்மை என்றும் இரு சக்கர வாகனத்தில் காற்றாய் கரைவதும் தான் ஆண்மை என்றும் இள வயது ஆண் கருதுகிறான் ..தான் எதுவென்று சொன்னாலும் மதித்து மறு வார்த்தை கூறாமல் பணிந்து நடக்க வைப்பது தான் ஆண்மை என்று முதிய பருவத்தில் காலடி எடுத்து வைக்கும் ஆண் கருதுகிறான் ..

இப்படியாக எல்லோரும் நாம் இது தான் ஆண் தன்மை என்று போலியான முகமூடி அணிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பலரை பயப்பட வைப்பது தான் ஆண்மை என்றால் அதை ஒரு துப்பாக்கியோ வேறு ஒரு ஆயுதமோ செய்துவிட்டு போய்விடும்.

எந்த வயது பெண்ணானாலும் பேரழகு பொருந்தியவள் ஆனாலும் தன் மனைவியை தவிர வேறு பெண்ணை நோக்கா பார்வை உடையவன் ஆண் தன்மை பொருந்தியவன் ஆகிறான். தனக்கு துன்பம் நேர்கையில் மட்டும் அல்ல உடன் இருபவர்களுகும் துன்பம் நேர்கையில் ஓடி சென்று உதவுபவன் ஆண் தன்மை உடையவன் ஆகிறான்.ஆக இப்படியானவனை சமூகம் வளர்தெடுபதே இல்லை . மேலே அந்த வாக்கியத்தை சொன்ன நண்பன் இன்னமும் தெருவில் நாட்டில் பக்கத்து நாட்டில் நடக்கும் சண்டையை அவலங்களை பார்த்து கொண்டுதான் இருக்கிறான் ஆண்மையோடு !!!!
~~~அருண்வாலி ~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இந்த படைப்புக்கு மாறுபட்ட கருத்து அல்லது குறை இருப்பின் விடுகையில் பகிரவும்....

எழுதியவர் : அருண்வாலி (28-Oct-14, 6:38 pm)
பார்வை : 219

மேலே