இப்படியும் சில காட்சிகள்----- சந்தோஷ்

மண்ணில் சிறுத்துளி
வியர்வை சிந்தியதில்லை
ஆனாலும்
குளிரூட்டபட்ட அறையில்
கணினி திரைக்குள்
முகம் புதைத்து
என் மூளையின்
வியர்வைத்துளிகளை
என் கண்ணில்
சேகரித்து சேகரித்து
தனிமையில் ஒட்டுமொத்தமாய்
தவணை முறையில்
சிந்தியிருக்கிறேன்...
சில முறை அழகாக..!
பல முறை அழுகையாக..!

எனது அறையிலும்
எனது உலகத்திலும்
ஒரு விசித்திரம்...!
நாலாப்புற சுவரும்
நான்கடியிலுள்ள மின்விசிறியும்
நாட்காட்டியும்
நாழிகைகாட்டியும்
எல்லாம் எதுவும்
பணப்பிடுங்கிளாகவே
எமக்கு காட்சிப்படுகின்றன.

சற்று சோர்வில் அயர்ந்தாலும்
பெருத்த சோகத்தை கொட்டிவிடுகின்றன
சிரிக்க இதழ் விரிக்கும்போதெல்லாம்
பல்வலிப்போல பணவலி வந்துவிடுகிறது..!



கடவுள் பெயரைச்சொல்லி
ஜோதிடம் பார்க்கவேண்டப்பட்டேன்.
ஜோதிடக்காரனோ
கொடுத்த ஐநூறு ரூபாய்க்கு
கிரகத்தை காரணம் காட்டி
பரிகாரம் கேட்கிறான்.
பரிகாரம் தானே...?
”சொல்லுங்கள்
செவ்வாய்கிரகத்திற்கு செல்ல
ராக்கெட் முன்பதிவு செய்துவிட்டேன்
சென்று வருகிறேன்.”
பரிகாசம் செய்தேன்.

காளி,பகவதி
சிவன், ஈசன்
என நிறமாறி அச்சமேற்றினான்..
”அடேய் அடேய்
கலையம்சம் என்பதால்
கடவுள்சிலையை வணங்குகிறேன்.
கடப்பாரையால் உடைத்தால்
வலிக்கும் ..
கடவுளைப்படைத்த சிற்பியின் மனம்
என்பதால் மட்டும் விட்டுவைத்திருக்கிறேன்.!”

நீ பெரியார்வாதியா என்றார் ஜோதிடர்
இல்லை
நான் பகுத்தறிவாளி என்றேன்

சரி சரி என்று
ஆறுதலுக்கு கவிதை
எழுத பேனாவை
எடுத்தேன்
“ ம்ம்க்கும் இதுமட்டும்
தான் இவனுக்கு குறைச்சல்”
முதுக்குப்பின்னால்
பல ஏளனக்குரல்கள்.!

”அடேய்.!
உங்களுக்கு என்னடா பிரச்சினை .. ? “”
எழுதிய பேனாவின் முனையை
ஏளனக்காரர்களின் முகத்தில் வைத்தேன்..

”ஒன்றுமில்லை
நீங்க பெரிய எழுத்தாளர்.. வாழ்க “
என்றது ஏளனவாய்கள்.



ஹா ஹா
நீங்க திருந்தவே மாட்டிங்களா ??


-இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (29-Oct-14, 4:35 pm)
பார்வை : 177

மேலே