உரையாடல்
சப்தமின்றி என் வாசல்
வருகிறது
உன்னுடைய மௌனங்கள்
வார்த்தைகள் !
மொழிபெயர்கிறது
உன் கண்கள் !
தீராத காயத்திற்கு
மருந்தாகிறது
உன் ஒவ்வரு வார்த்தையும் !
காற்றில் உன் குரல் மட்டுமே
இன்னிசையாக கேட்கிறது !
நான் அதிகம் பேசிடவிரும்பவில்லை
உன் பேச்சால் !
ஓயாத கடல் அலை போல்
நீ பேசிட வேண்டும்
அழியாத கரையாக
உன் குரலை நான் கேட்டிடவேண்டும் !
உன் உரையாடலில்
பைய பைய
நகர்கிறது என் வாழ்க்கை !
.
பா. விக்னேஷ்