நினைத்ததும் நடந்ததும்
உழைத்துக் களைத்து
உறங்கினேன்..
வியர்வை காய்ந்திட
துண்டதனை உலர்த்திப்போட்ட பின்னே ! .
எழுந்து பார்த்தேன்..
சிதறியிருந்த சில்லறை காசுகளை!
வருந்தினேன்..
வெளியூர்க்காரன் நான்..
பெரும் பணக்காரன் நான்..
கைக்காசை பறிகொடுத்து
ஊர் திரும்பிடவே
உழைத்து கூலியாய்
மாறினேன் சுய மரியாதையினால்.!
சேர்ந்த சில்லறைக் காசுடனே
பெற்ற கூலியில் அதை சேர்த்து
சிற்றுண்டி பெற்று தந்தேன் சில
பிச்சை காரருக்கே!
பேருந்து வந்திட புறப்படுவேன்
அது வரை சிலரை எண்ணி
மகிழ்ந்திருப்பேன்!