மயககம் கவிதை

*
பொழுது சாய்ந்தால்
பூக்களுக்கு
மயக்கம் வரும்
உதிர்கிறோமே என்று
தயக்கம் வரும்
விதியை நொந்து
துக்கம் வரும்
*
காலையில் எழுந்து
இரைத் தேடிக்
குப்பையைக் கிளறிக்
கொண்டிருக்கின்றன
கூவி முடித்தக்
கோழிகள்.
*
உபயோகப்படுத்தாமல்
பரண்மேல்
சும்மா
படுத்திருக்கின்றது
நெல்லுக் குத்தும்
உலக்கை.
*
கோள்மூட்டிகளின் பொறாமைப்
பேச்சினைக் கேட்டு
மனம் நொறுங்கிப் போனாள்
நெருங்கிய நண்பி.

எழுதியவர் : ந.க.துறைவன் (1-Nov-14, 4:06 pm)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 91

மேலே