காதலுடன் நிலா---------நிஷா

வெண்பனிக்கு முத்தம் தர
வெண்ணிலவு ஆசை கொண்டது;
விடிய விடிய காத்திருந்து
வெள்ளை முகம் வாடிப் போனது...

மெல்ல மெல்ல முகம் மறைத்து
மேகத்தோடு நட்பு கொண்டது;
மேகம் சொன்ன சேதி கேட்டு
மோகம் இன்னும் கூடிப் போனது..

கிழக்கு வெளுக்கும் நேரம் வரை
கீழ்வானம் சிவக்கும் வரை
காத்திருந்து காத்திருந்து ஏக்கம் கொண்டது
கண்விழித்து கண்விழித்து தூக்கம்
தொலைத்தது....

காதல் கொண்ட சேதி சொல்லி
கதிரவனை தூதனுப்புது
சேதிகேட்ட பனித்துளிகள் வெட்கத்தோடு
சிரித்து சிரித்து ஓடி ஒளியுது.....

எழுதியவர் : நிஷா (2-Nov-14, 8:56 pm)
பார்வை : 122

மேலே