குரூரத் திருமணம்
குறிஞ்சிப் பூ பூக்கும் அந்திமக் காலம் வாசம்
வீசும் தேனைத் தேடி அலையும் வண்டுக்களின்
பசிக்குப் படையல்!!! அத்தனைக் காலம் பொத்திவைத்த
பெண்பூ,மொட்டு விரித்து ,மலர்ச்சி அடைகிறாள் !!
பதுமை நிறைந்த பதின்ம பருவம் அது .....
சிலருக்குப் புதுமை யானது அப்பருவம் ..பலருக்கு
வெறும் வெறுமையே ..இது தான்
இன்றைய பெண் குழந்தையின் நிலைமை !!!!
வேலியாக இருக்க வேண்டிய செடிகள்..தான்
பெற்றெடுத்த மொட்டுக்களை ..வண்டுகளுக்கு
இரையாக்குகின்றன குழந்தைத் திருமணம்
என்னும் இறைச்சிக் கூடத்தில்.....
சமூகத்தின் கொடூர கூடாரத் திற்குள் ..சூரை -
யாடப் படுகின்றன இந்த இளம் பிஞ்சுக்
களின் இளமைக் காலம் ....
பதுமையின் உறைவிடம் புதுமை,வாழ்வின்
இளவேனிற் காலத்து இரவல் இளமை ,இந்த இலக்கண
மெல்லாம் முரண்பட்டுப் போகிறது ..இந்த
மொட்டுக் களின் வாழ்வில் ..!!!
காதலுக்கும் காமத்துக்கும் நடக்கும் மகரந்த
சேர்கையில்,அதற்கு அர்த்தம் கூட தெரியாத
பிஞ்சுமனங்களைக் கொட்டி கொட்டி கொலை
செய்யும் குரூரம் என்று ஓயும் ????
இந்த பெண் குழந்தைகள் பாரதத் தாயின்
செல்லப் பிள்ளைகள் அல்லவா ...இவளின் சாதனை நம்
பாரதத்தின் சாதனை அல்லவா..திருமணக் கதவுக்குள் என்
சகோதரிகளை பூட்டி வைக்காத சமூகமே...!!!
உன் வேர்கள் அவர்களின் வாழ்வை..உறிஞ்சிக்
கொண்டிருக்கிறது..எத்தனை நாள் தொடரும்
இந்த அக்கிரமம் ..அதிகரித்தால் அறுத்து எறியவும்
தயங்க மாட்டோம் ..உன் ஆயிரங்காலத்து வேர்களை ..!!!!!!