நாழி நெல்

நாற்று நடுவர் நாற்று நடுவர்
சேற்றில் இறங்கி நாற்று நடுவர்
பாட்டு படிப்பர் பாட்டு படிப்பர்
படும்பாடு எல்லாம் சேர்த்து படிப்பர்
ஏற்றம் இறைப்பர் ஏற்றம் இறைப்பர்
மாநிலம் முழுவதற்கும் ஏற்றம் அமைப்பர்
நாட்டம் உரைப்பர் நாட்டம் உரைப்பர்
மண் பொன்னாய் விளைய நாட்டம் உரைப்பர்
கூச்சம் படுவர் கூச்சம் படுவர்
நகர்புறத்தின் அங்கீகாரம் ஏற்க கூச்சம் படுவர்
அகம் மகிழ்வர் அகம் மகிழ்வர்
கீழ்வானம் கருக்கையில் அகம் மகிழ்வர்
மனம் புடைப்பர் மனம் புடைப்பர்
களத்துமேட்டில் அறுவடை குவிய மனம் புடைப்பர்
கை குவிப்பர் கை குவிப்பர் கண் நனைய கை குவிப்பர்
பிறரின் பசிபோக்கும் புண்ணியம் கிடைத்தமைக்கு
நாழி நெல்லுக்குள் இறைவனை கண்டு பூசை வைப்பர்

எழுதியவர் : கார்முகில் (3-Nov-14, 7:39 pm)
Tanglish : nanjai nilam
பார்வை : 407

மேலே