தெரிந்ததில்லை, புரிந்ததில்லை, அறிந்ததில்லை, ஆயிந்ததில்லை மழலையாய் இருக்கும் வரை

மழலையாய் இருக்கும் வரை
தெரிந்ததில்லை?
புரிந்ததில்லை?
அறிந்ததில்லை?
வாழ்வின் நெளிவு சுளிவு
ஆகையால் அவைப்பற்றி ஆயிந்ததில்லை

ஜனனமும் மரணமும்
தெரிந்ததில்லை?
புரிந்ததில்லை?
அறிந்ததில்லை?
ஆகையால் அவைப்பற்றி ஆயிந்ததில்லை!


இன்பமோ துன்பமோ
கண் இமை மூடி திறந்திடும்
மணித்துளிகளில் தொலைந்து விடும்


சிரிப்பில் மகிழ்ச்சியும் புரிந்ததில்லை?
கண்ணீரில் சூழ்ச்சியும் புதைந்து கிடக்கும்
தெரிந்ததில்லை?

நல்லவன் கெட்டவன்
தெரிந்ததில்லை?

காதல் காமம்
புரிந்ததில்லை?

வெற்றி தோல்வி
அறிந்ததில்லை?
ஆகையால் அவைப்பற்றி ஆயிந்ததில்லை!





எதற்காக பசி?
எதற்காக உணவு?
எதற்காக உடை?
எதற்காக வலி?
எதற்காக அழுகை?
எதற்காக ஒப்பனை?

என நீளும் பட்டியல்
தெரிந்ததில்லை?
புரிந்ததில்லை?
அறிந்ததில்லை?
ஆகையால் அவைப்பற்றி ஆயிந்ததில்லை!



இல்லை இல்லை இவை யாவும்
இன்று இளமையின் இலவச
பிரசவத்திற்கு பின்.........

எழுதியவர் : பாரதி செல்வராஜ். செ (5-Nov-14, 4:52 am)
பார்வை : 87

மேலே