நாங்களும் மனிதனே

பணியிலிருந்து ஒய்வு பெற்றார் தங்கராசு ..மானேஜரைப் பார்த்து வணங்கி விடை பெறுகிறார்.. உடனே மானஜர் தன் பெண்ணின் திருமணப் பத்திரிகையைத் தருகிறார்.. மறுக்காமல் வங்கிக் கொண்டு மனபாரத்துடன் வீட்டிற்கு செல்கிறார்.

வீட்டில் மனைவி கேட்கிறாள் ...;ஏங்க ரொம்ப சோகமா வர்றீங்க? பியூன் வேலை இன்னையோட ஒய்வு பெற்றாச்சு அப்புறம் ஏன் ?

தங்கராசு; எனக்கு அதெல்லாம் கவலை இல்லை ....மானேஜர் தன் பொண்ணோட திருமண பத்திரிகைய எல்லோருக்கும் வீட்டில் போய் தருகிறார்...தனக்கு மட்டும் ஆபீசிலே தந்தாரே அதான் எனக்கு வருத்தம் ...அவங்க வீட்டு விசேசம்னா நாங்க எல்லா வேலையும் செய்கிறோம் ...மற்றவர்களுக்கு கொடுக்குற மரியாதையை எங்களுக்கு தராமல் இருந்தால் பரவாயில்லம்மா ...இனிமே வரப் போகிற பியூனை மனிதனாப் பார்த்தா போதும் என வேதனை பட்டார்.

நாம் தெரிந்து கொள்வோமே மனிதம் பற்றியும் அறிந்து கொள்வோமே இக்கதையில் ....

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (5-Nov-14, 6:28 am)
Tanglish : naankalum manithane
பார்வை : 209

மேலே