தாயின் அன்புமுத்தம்
பின்னிரவு வேளைப்
பனிக்காற்றின் தீண்டலில்
வெடவெடக்கும் சிறு பூவாய்
உலகுக்கு அஞ்சி பய அலைகளில்
நனையும் தருணமதில்
ஈர முத்தமிடுகிறாய் நீ
எந்தன் முன் உச்சி
முகர்ந்த நின் சுவாசத்தில்
விலகிப் போனதென் சோகங்கள்
உள்ளங்கையில் அள்ளி
அணைத்து நீ தந்த
முதல் இதழ் தீண்டலில்
உயிர்ப்பித்தேன் உயிரளவில்
ஒவ்வொரு
ஸ்பரிசத்திலும் என்னுள் தாயமுது
சுரக்கும் அன்பில் நீ
என்னில் உன்னைக்
காணும் நொடிதனில்
இதழ் பிரியாது
மௌனமாய் மனம் திறந்து
தொட்டுவிடுகிறாய்
காற்றில் கரைந்த ஈரமென ...
ஓசையின்றி இசைத்த
உன் வாயமுதில்
சிறகின்றி அளந்துவிடுகிறேன்
சின்ன வானத்தை
உலகைக் கட்டி
ஊஞ்சலாடுகிறேன்
லயங்கள் தோற்கும்
சங்கீதப் பரவசத்தில்
கனவுகள் வலுப்பெற
கண் இமைகளை வருடுகிறதுன்
மென் முத்தங்கள்
சிறு முத்தத்தில் தெறித்த
துளி அமிர்தம் கலந்து
சாகாவரம் பெற்றது தாயன்பு!!
A.KARTHIKA ,
first year M.E -Applied Electronics.