புதிய பாடம்
ஒரு சீடன் தன் குருவிடம் ''குருவே நல்லதப் படைத்த இறைவன்தானே கெட்டதையும் படைத்துள்ளான் . அதனால் நல்லதை மட்டும் ஏற்பதுபோல இறைவன் படைத்த கெட்டதையும் ஏற்றால் என்ன ?என்று கேட்டான்.
அதற்கு குறு அந்த கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்று விட்டார். தன் கேள்விக்கு குருவாலே பதில் அளிக்கமுடியவில்லைஎன நினைத்தான்.
பகல் உணவு வேலை வந்தது. அப்போது தனக்கு அளிக்கப் பட்ட உணவைப் பார்த்து சீடன் அதிர்ந்தான் .
ஒரு கிண்ணத்தில் பசு மாட்டுச் சாணம் மட்டும் வைக்கப் பட்டிருந்தது...அதிர்ச்சியில் ...கண்டவனிடம்
புன்முறுவலுடன் குரு சொன்னார். பால் ,சாணம் இரண்டுமே பசுமாட்டிடம் இருந்துதான் கிடைக்கிறது. பாலை ஏற்றுக் கொள்ளும்போது சாணத்தை ஏன் ஏற்றுக் கொள்ளக் கூடாது ...இதிலிருந்து தான் கேள்விக் கேட்பதை விடுத்தான் ..சீடன் ''புதிய பாடம்'' ஒன்றை கற்றுக் கொண்டான் ..