அதுதான் வேணும்

குழந்தை ; அம்மா அம்மா பக்கத்துக்கு வீட்ல ஒரு பொம்மை இருக்கு எனக்கு வேணும்

அம்மா; அது வேண்டாண்டா செல்லம் பிடிக்கலன்னா உன்ன அடிக்கும்

குழந்தை; அது இருந்தா என்ன குளிப்பாட்டிவிடும் , , சாப்பாடு ஊட்டி விடும், ஸ்கூலுக்கு கூட்டிட்டு போகும் ...என்னோட விளையாடும் ...அது வேணும்மா ..

அம்மா; என்ன கண்ணு அதெல்லாம் வேணாம்...அழாதம்மா

அப்பா; அவ என்ன கேக்குறா வாங்கிக் கொடு டி

அம்மா; அவ பக்கத்துக்கு வீட்ல இருக்குற ''ரோபோ'' வ கேக்குறா?

அப்பா; சரியாப் போச்சு ... நாங்கல்லாம் வேண்டாமா?

குழந்தை; வேண்டாம் ...எனக்கு ''ரோபோ'' தான் வேணும்

அப்பா; அடம் பிடிக்காதம்மா ?பொட்டிக் கடைல கிடைக்கிற மாதிரி கேக்குற ?? ..

குழந்தை ; இல்லன்னா நா சாப்ட மாட்டேன் ஸ்கூலுக்கு போக மாட்டேன்

அப்பா; அடக் கடவுளே! கஷ்டகாலம்

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (6-Nov-14, 7:16 pm)
Tanglish : athuthaan venum
பார்வை : 237

மேலே