வாழ்க்கை உனக்கு வசப்படும்

தோழா!-
தொலைந்துபோன நாட்களை
தேடாதே

அது- உன்
வாழ்நாளை
வீணாக்கிவிடும் .

கலைந்துபோன கனவுகளை
காண நினைக்காதே ...

நீ - அதிகாலையில்
விழித்து எழுந்ததற்கு
அர்த்தமில்லாமல் போய்விடும் .

கவலை தரும் எண்ணங்களை
மனவட்டிலிலிருந்து வழித்து எறிந்துவிடு ..

ஏன் எனில் ...அது
புதிய என்ணங்களின்
ஊற்றுக்கண்களை
அடைத்துவிடும் .

மற்றவர்கள் தொலைத்ததை - நீ
தேடவேண்டாம் - அது
உன் வேலையல்ல ...

நீ-
உன்னைத்தேடு - உன்னுள்
உன்னைத்தேடு .

நீ- யார் ? என்பதை
நினைத்துத்தேடு

வாழ்க்கை உனக்கு
வசப்படும்.

எழுதியவர் : மா . அருள்நம்பி (8-Nov-14, 11:16 pm)
சேர்த்தது : மா. அருள்நம்பி
பார்வை : 144

மேலே