தோற்றினும் முயற்ச்சி செய்
தோல்வி துவண்டு போவதர்கல்ல
குறைகளைய்த் தோண்டி எடுப்பதர்கே
சிறகு ஒடிவது இடிந்துபோக அல்ல
மறக்க முடியாமல் மடிந்துபோக அல்ல
முயற்ச்சிக் கிளைகள் படற
மருந்து போட்டுக்கொண்டு மீண்டும் தொடற
தோல்வியை அறிவாள்முனை எனக் கொல்லாதே
வெற்றிப் பாதையில் திருப்பு முனையே தோல்வி
உளி பட்டால்தான் கல் சிலையாகும்
சூடு பட்டால்தான் கல் சுண்ணாம்பாகும்
மீண்டும் பாடுபட்டால்தான் கணவு நணவாகும்
கலங்காதே தோழா காலவிரயம் மட்டுமே மிஞ்சும்
புரிந்துகொள் தோழா புதுக் கண்ணோட்டம் வேண்டும்
தோல்வி ஒரு புதையல்
அதில்
முயற்சி செய்யத்தூண்டும் முதுக்கள்
பயிரிச்சி செய்யத்தூண்டும் பாசிமணிகள்
அனுபவமென்னும் அணிகலன்கள்
தன்னம்பிக்கையென்னும் தங்க நானயங்கள்
மனந்தளராமை என்னும் மாணிக்கங்கள்
வாய்ப்புகளை உணர்த்தும் வளையல்கல்
வைராக்கியம் கொடுக்கும் வைரங்கள்
பன்பை வளர்க்கும் பவளங்கள்
என இன்னும் பல கிட்டும்
உன்னால் புதுக் கண்ணோட்டத்தில் பார்க்க முடிந்தால்
கேள் தோழா
நம்மில் பலர் புதையல் எடுக்கத் தெரியாதவர்கள்
புதயலை வைதுக்கொண்டு புலம்புபவர்கள்
புதைக்குழிக்கு அஞ்சலாம் புதையலுக்கு அஞ்சலாமா?
புதையலுக்குள் புதைந்துவிடாதே
எடுதுக்கொண்டு புரப்படு
உனது மறுபக்கம் காட்டிடு
உலகை உன்பக்கம் திருப்பிடு
உன்னை நீ நம்பு
உன்னிடம் உள்ளது தெம்பு
தோல்வியை முயற்ச்சி கொண்டு நெம்பு
பிறகு உனக்கே முழங்கும் வெற்றிச் சங்கு.
-கார்த்திக்.சி
4 ம் ஆண்டு இயந்திரப் பொறியியல்
பி.எ.பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
பொள்ளாச்சி.