ஓர் எழுத்தாளனின் கதை -தொடர்ச்சி 08 - சந்தோஷ்

காவியா .. ஆக்ரோஷத்திலிருக்கும் தினகரனை பார்த்துக்கொண்டே அவனை, அவனின் கோபத்தை குறைக்க ஒரு வித்தியாசமான முயற்சியாக கையில் ரோஜாவுடன் அவனருகில் செல்கிறாள்.

“ தினா. இந்த ரோஜாப்பூவை பாரேன். ப்ளீஸ் ஒரே ஒரு நிமிஷம்... இந்த ரோஜாப்பூவை பாரு தினா.” காவியாவின் முகத்தையும் அவள் கையில் ரோஜாவையும் கண்ட தினகரன்..?

“ காவி...! நான் இப்போ ரொம்ப ரொம்ப ஹைலி ப்ரெஷர்ல இருக்கேன். நீ என்ன சொல்லவர...? “ இராட்சதமாக ரத்தம் கொந்தளிக்கும் மனதிலிருப்பவனுக்கு காதலியின் பேச்சு கூட ஒரு பொருட்டே அல்ல என்றது அவன் பேச்சின் தொணி...!

“ தினா.. ஒரே ஒரு தடவை.. அன்னிக்கு நாம பேசின ரோஜா டைலாக்.. நினைச்சி பாருடா...... “

“ நோ .. "சுட்டெரிக்கிறது தினகரனின் பார்வை..!

--------------------------------------------------------------------------
(( அன்றொரு நாள் தினகரனும் காவியாவும் அந்த இரவின் குளிரில் காதலின் போதையில் காமத்தின் எல்லையை தொட்டு ஒரு கூடலுக்கான உந்துசக்தி தரும் அந்த தருணத்தில், இருவருக்குள்ளும் எழுந்த அந்த மனக்கட்டுப்பாடு அவர்களின் காதலை காமத்தின் புயலிருந்து கட்டுப்படுத்தி நிச்சயக்கப்படாத உறவை புனிதப்படுத்தியது. அப்போது தினகரன் அங்கிருந்த பூந்தொட்டியிலிருந்த செடியில் பறித்து கொடுத்த ஒற்றை ரோஜாவை காவியாவிற்கு கொடுத்தான் தினகரன்.

“ காவி.... இந்த ரோஜா இருக்குல்ல ரோஜா...! எவ்வளவு பெரிய சூறாவளி காற்றிலும் ஒவ்வொரு இதழா உதிர்ந்தாலும் கடைசி இதழில் கூட அந்த காம்போடு பார்க்க அழகா இருக்கு இல்ல. “

“ ம்ம்ம்ம்ம் “ காவியா ம்-மிலுள்ள ஒருவிதமான கிறக்கத்தை கவனித்த தினகரன்.. “ காவி... ஜஸ்ட் ஒரு செகண்ட் யோசிக்காம நாம தப்பு பண்ணிடலாம். இந்த குளிர்ல இந்த தப்பு நமக்கு தேவையாவும் கூட இருக்கலாம். பட் ... இந்த இடத்தில இப்படி நாம பண்ற ஒரு தப்பு நம்ம வாழ்க்கையே தப்பாக்கிடும் இல்லையா காவி ??

“ ம்ம்ம்ம்ம் “ மீண்டும் ம்ம்ம் போட்டாள்...!

” ம்ம்ம் நான் எதோ உளறிட்டு இருக்கேன்னு நினைக்கிறேன்... எதாவது பேசு காவி.. “

“ தினா............. இப்போ எதுக்கு எனக்கு ரோஸ் கொடுத்த? “

“ காரணமிருக்கு... நம்ம மனசை டைவர்ட் பண்ணதான்... நம் உடல்கள் சேர்ந்து அடையும் சுகத்தை விட.. இந்த ரோஜாவை கொடுத்து உன் கண்ணுல தெரியும் காதல் பார்வையில எனக்கு சுகம் அதிகம். காவி. இதுப்போதும் நம்ம கல்யாணம் வரைக்கும் இந்த சுகம் தான் எனக்கு காமச்சுகம்... “ தினகரன் எதோ உளறிக்கொண்டிந்தான்.

“ அப்போ எனக்கு.. என்ன சுகம்....? .” காவியா எதிர் கேள்வி எழுப்பினாள்.

“ என்னடா காவி... என்ன சொல்றதுன்னு தெரியல? “

“ அடலூசு உன் கண்ணுல தெரியுற அந்த ஏக்கமான பார்வைதான் எனக்கும் சுகம் டா. பொண்ணுக்கு மட்டுமில்ல பசங்களோடு கண்ணும் கவர்ச்சிதான். இன்னும் சொல்லபோனா.. உன் கண்ணுக்கு நான் அடிமைடா என் காதலா. சரி இந்த ரோஜா தான் நம் உணர்ச்சிக்கு கட்டுப்பாடு இல்லையா. சரி எல்லை மீறும்போது இந்த ரோஜா போடும் நமக்கு ஒரு தடா.. ஹா ஹா ஹா... “ புதுசாக காவியாவும் உளறினாள்.

” யெஸ் காவி....! இந்த ரோஜா நமக்கு தேவைப்படும் கட்டுப்பாட்டு ராஜா... ஒரு கவிதை சொல்லட்டுமா ? “

“ ம்ம்ம்ம் சொல்லுங்க கவிஞரே... “


எப்போது வேண்டுமானலும்
என் எந்த போர்களத்திலும்
அன்பே நீ
புன்னகைத்து ஒரு ரோஜாவை நீட்டு
உன்நெற்றியில் ஒரு முத்தமிட்டு
உன்னிதழில் என்னிதழ் ஈரத்தால்
ஓர் ஓவியம் வரைந்தே பிறகே
என் போரினை தொடருவேன்.

நீ கொடுக்கும்
ரோஜாவின் வாசத்தில்
உன்னிதழின் ருசியில்
ஏறிடாதோ எனக்கு
யுத்தத்திற்கான மொத்த வீரம்................?


“ அருமை அருமை கவிஞனே.... “ ))

---------------------------------------------------------------


“ தினா... என் கண்ணை பாருடா...! ஒரே ஒரு நிமிஷம்... “ காவியாவின் கெஞ்சல் எதுவும் தினகரனின் மனதை மாற்றமுடியவில்லை. அவனின் மனநிலை அப்போது.. இந்த அரசாங்கத்தின் மீதான, அரசியல்வாதி ,அதிகாரி மீதான வெறித்தனமாக கோபமாகவே இருந்தது.

நீதிபதி, கலெக்டர் , எஸ்.பி என்று அனைவரையும் துப்பாக்கி முனையில் நிறுத்தி கொலைமிரட்டல் விடும் தினகரன் செய்யும் செயல் அவனின் ஆத்திரம் மட்டுமே.. அறிவார்ந்த செயல் அல்ல.. இதுவே தீர்வல்ல என்பதை நொடி நேரத்தில் தீர்மானித்துதான் காவியா தினகரனை ரோஜாவுடன் காதல் மிரட்டல் மிரட்டுகிறாள்.


“ தினா....................................................!! “ ஓங்கி ஒலித்த காவியாவின் குரலில் பறவைகள் சிறகடித்த பறந்தன வானில்

தினகரன் இம்முறை தன் ஆக்ரோஷத்திலிருந்து தடம்மாறி சற்று மிரண்டுதான் போனான் ..

“ சொன்னா கேட்கமாட்டீயா..

ம்ம்ம்ம் இந்த ரோஜாவை கையில வாங்கு.... “ மிரட்டினாள்

வாங்கிக்கொண்டான்.

”என்னை பாரு...ம்ம்ம் என் கண்ணை பாரு.... ”

பார்த்தான்..

“ எல்லை மீறும் போது இந்த ரோஜாதான் நமக்கு தடா... சொன்னேன்ல.. டா.... இப்போ நீ எல்லை மீறிட்டு இருக்க. அன்னிக்கு நீ சொன்னதுதான்.. ஒரு செகண்ட் போதும் தப்பு பண்ண.. ஆனா அந்த தப்பு நம் வாழ்ககையை வீணாக்கிடும்.. சொன்னீல.. இப்போ நீ தப்பு பண்ணிட்டு இருக்க “

“ காவி... அது வேற .. இது... “ தினகரனை பேசவிடமால் அவனருகில் நெருங்கினாள். அவன் இதழில் இவள் இதழை கொடுத்தாள்,

வெறித்தனமாகவே முத்தமிட்டாள்.. கோபத்தின் உச்சத்திலிருப்பவை அதே கோபத்தில் முத்தமிடுகிறாள். இந்த முத்தம் காமத்தை சார்ந்தது அல்ல. காதலும் அல்ல. முத்தமிட்டு பின்பு சத்தமிட்டு கேட்க ஆரம்பித்தாள் தினகரனிடம்..

நீ என்ன பெரிய இவனா... ? .. துப்பாக்கி கையில தூக்கிட்டா நீ பெரிய புடுங்கியா பெரிய போராளியா ?
நீ என்ன பெரிய சே குவேரான்னு நினைப்போ... ?

உன் கையிலிருக்கிற எத்தனை துப்பாக்கில எத்தனை குண்டு இருக்குன்னு தெரியுமா? எத்தனை பேர சுடுவ?
இன்னிக்கு நீ சுட்டா நாளைக்கே நாடு திருந்திடுமா ? “

கேள்வி மேல் கேள்வி கேட்டு தினகரனை அந்த அதீத ஆக்ரோஷ மனநிலையிருந்து அவனை விடுவித்து கொண்டிருந்த காவியா தீடிரென்ன...

” அய்யோ தினா.......................................அடப்பாவிகளா “


அந்த நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த அதிகார மையங்களின் அதிகாரிகள் தங்கள் கடமையை செய்ய ஆரம்பித்தனர்.



( தொட.. ரு.. ம் )

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (10-Nov-14, 1:24 pm)
பார்வை : 372

மேலே