பாரதத் தாயே அருள்வாயாக

சொல்லால் பொருளால் உயர்ந்தவளே
உயர் வள்ளுவன் தன்னை பெற்றவளே
அவ் வள்ளுவன் மண்ணில்
எம்மையும் படைத்தவளே
பாரதத் தாயெனும் பெயர் கொண்டவளே


எல்லாம் மாறும் எம் பாரத நாட்டில்
இன்றளவும் மாறவில்லையே
இந்த ஏழைகளின் நிலை..


கால் வயிறு நிரம்பக் கூடக்
கஞ்சியின்றி வஞ்சகம் செய்யப்பட்ட
இவர்களின் நிலை தான் என்ன ???


ஏழை இல்லா இந்தியா என்று வருமோ..??
பாரதத் தாயே அருள்வாயாக..!!

எழுதியவர் : மு.க.சரவணன் (12-Nov-14, 11:19 pm)
பார்வை : 478

மேலே