முடியாமல் போனது

அவள் ஊசியில்
நூல் கோர்த்துக்
கொண்டிருக்கிறாள்..
முடியாமல்
சலித்துப் போய்
சோர்ந்து..
சாய்ந்து ..
உட்கார்ந்தாள்..
விட்டத்தைப் பார்த்தபடி!
காதலித்தவனை
மணக்க முடியாமல்
தோய்ந்து போய்
ஒரு காலத்தில்
உட்கார்ந்திருந்த மாதிரியே!

எழுதியவர் : கருணா (14-Nov-14, 3:33 pm)
Tanglish : mutiyamal ponathu
பார்வை : 247

மேலே