முத்தப் போராட்டம் - கோழிக்கோட்டில் ஆரம்பித்த ,,
இயற்கை தளும்பும் கேரளம் ..
கோழிக்கோடு என்றோர் அழகிய சின்னம் ..!
குளு குளு குழம்பி கடையின் மூலையில் ,
காதல் பெயரில் இரண்டு காமுண்டர்கள் நடத்திய முத்தக் காட்சி ..
அதை பார்த்ததோர் கலாச்சார காவலர் கூட்டம் ..
பிறகு என்ன ,
அடி உதை தான் ..
விட்டு வைக்கவில்லை கடையையும் ..
வெடித்ததே போராட்டம் ,
கூடியதே காமுண்டர்கள் கூட்டம் ..
முதலில் வெடித்தது கொல்கத்தாவில் ,
பிறகு பரவியது வடக்கு எங்கும் ..
இவர்களை முற்போக்கு எண்ணம் கொண்டவர்கள் ,
என்றே விமர்சிக்கிறது ஊடகங்கள் ..
ஏற்கனவே வடக்கில் உங்கள் முத்தப் போராட்டத்தினால் ,
என் பாரதத் தாயின் கலாச்சார உடையை களைந்து விட்டீர் ..
என் தெற்கு கலாச்சாரத்தில் குறையவில்லை ,
என்றே பெருமூச்சு விடும் முன் ..
தமிழன் தலைநகரில் ..
இந்திய தொழில் நுட்ப்ப கல்லூரியில் ,
முத்தப் போராட்டம் நேற்று ..
போராட்டம் நடத்திய கயவர்கள் ,
வடக்கில் இருந்து கல்வி கற்க வந்த காமுண்டர்கள் ..
உங்கள் போராட்டம் கல்லூரி சுற்றுச் சுவற்றோடு நிற்கட்டும் ,
ஒரு அடி வெளியே வைத்தாலும் ..
கழிவறை செல்ல கூட கால்கள் இருக்காது ,
நீ முத்தம் பதிக்க தலை இருக்காது ..
என் பாரத தேசத்திற்கு உயிரையும் கொடுப்போம் ,
பாரத தாய்க்கு ஒரு இழிவு என்றால் உயிரையும் எடுக்க தயங்கோம் ..
முத்தத்தில் தவறு இல்லையாம் ,
இது கமுண்டர்களில் கருத்து ..
உண்மையே ,
அது கன்னத்திலும் கை மணிக்கட்டிலுள் பதியும் போது ..
காமுண்டர்களே ,
இன்று காதலில் கற்பிழந்த என் தேசத்து சகோதரிகளை கேளுங்கலடா ,
இதழ்களில் பதித்த முதல் முத்தமே அதற்க்கு முதல் காரணம் என்பர் ..
நல்ல வேளை ..?
என் தாத்தன் வள்ளுவன் இன்று இல்லை ,
உங்களுடன் வழக்காடியே அவன் ஆயுள் போயிருக்கும் ..
என் மாமா நேரு நேற்று இல்லை ,
நேற்று குழந்தைகள் தினத்திலேயே உயிர் பிரிந்திருக்கும் ..
என் சித்தப்பன் பாரதி முந்தைய நாள் இல்லை ,
புதுமைப் பெண்களை கண்டு கண்களில் ரத்தம் வடித்திருப்பான் ..
என் தேச பிதா மகன் இல்லை ,
பெற்ற சுதந்திரம் எண்ணி தலை குனிந்திருப்பான் ..
இந்தியா என்றால் " பண்பாடு கலாச்சாரம் "
முற்போக்கு எண்ணம் என்ற பெயரில் ,
பேணிக்காத்த என் பாரத தாயின் கர்ப்பை சூரையாடாதீர்கள் ...!!