உன்னை சிந்தித்தால்

உன்னைப்பற்றி சிந்தித்தால்...
என் காலம் நகர்வதில்லை...

உன்னைப்பற்றி சிந்திக்கும் போது,
என்னை மறந்து போகும் மாயம் என்ன...?

என் யோசனைகளின் முடிவிலோ,ஆரம்பத்திலோ
நீ வந்து விட்டால்...
உன்னைப்பற்றி யோசிக்க ஆரம்பித்து விடுகிறேன்..

நிகழ்காலத்தை மறந்து,
உன்னில் தொலைந்துபோகிறேன்..

உன்னை சிந்தித்தால்..
என் இதயத்துடிப்பின்
வேகம் கூடும்...
மூச்சுக்காற்றின் வேகம் அதிகரிக்கும்...
எனக்குள் ஆயிரம் வேதியியல் மாற்றம்
நிகழும்...

உலகமே வெறுமையாகும்...
உன்னை சிந்தித்தால்...


திருவள்ளுவர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி.
பொன்னூர் மலை - 604 505
வந்தவாசி.

எழுதியவர் : JAKIR (15-Nov-14, 1:57 pm)
பார்வை : 79

மேலே