ஆசை

முத்தமிட வேண்டும்
உன் சிறு கன்னத்தில்
அழ வேண்டும்
முகம் புதைத்து உன் மார்பில்
துயில வேண்டும்
உன் மடியில் சாய்ந்து
நடக்க வேண்டும்
உன் கரம் பற்றி நிலவொளியில்
சிரிக்க வேண்டும்
உன் நகைச்சுவையில்
கதைகள் பேச வேண்டும்
உன் மடி சாய்ந்து முழுநிலவில்
ஆசை தான் எனக்கும்
என்ன என்னவோ - ஆனால்
இயலவில்லையே

எழுதியவர் : (18-Jun-10, 1:10 pm)
சேர்த்தது : Sherly
Tanglish : aasai
பார்வை : 560

மேலே