நீ மறையாமல் இருப்பாயோ

நிலவே ....
எனக்கு ஒரு உதவி செய் ...
என்று உன் உதவியுடன் ...
அவர் அருகில் இருந்தேன் ...
இணையில்லா இன்பத்தை ...
பெற்றேன் ....!!!

இன்று அவரை ...
தேடுகிறேன் - காணும் ..
நிமிடம் வரை -நிலவே ...
நீ மறையாமல் இருப்பாயோ ...!!!

குறள் 1210
+
விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி.
+
நினைந்தவர்புலம்பல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 130

எழுதியவர் : கே இனியவன் (17-Nov-14, 11:01 am)
பார்வை : 64

மேலே