கனவுகள் மெய்ப்படவேண்டும்

(இது நூற்றாண்டு கடந்த ஓர் கனவு பயணம்)
நாளைய பொழுதில் நானொரு
வேள்வி அமைக்க வேண்டும்
அதில் மந்திரம் ஓத - ஓர்
பண்டித ரேனும்வந் தமரவேண்டும்
வேதியர் வரின் அதை
கண்டிட இயந்திரம் கொள்ளா
மனித இருதயம் வேண்டும்

காலம் கடந்த இக்காட்சி கண்டு
மாரி யவள் மறவாமல் தன்
ஸ்பரிசம் கட்ட வேண்டும்- அதில்
நுரையீரல் நிரப்ப எங்கேனும்
பசுமை மாறா சிறு
புற்கூட்டம் வேண்டும்

புல்லது இருப்பின் அதை உண்ண
நாலொரு அக்றிணை நடமாட வேண்டும்
அதோடு அரிசி சோறுண்ண -சில
மானுடர் மனமெண்ண வேண்டும்
மானுடம் இருப்பின் அங்கே எம்
அன்னை தமிழ் நின்று
ஆருடம் சொல்ல வேண்டும்

தமிழது இருப்பின் காவலாய்
கவிஞர் சிலர் வேண்டும்-அவர்பாட
கருப்பொருளாய் காதலது உயிர்பெற வேண்டும்
காதல்தனில் கற்புமாறா காமனவன் வேண்டும்
அறிவியல் வந்து ஆய்ந்து போனபின்னே
மிச்சமாய் அங்கங்கே
மனிதம் நிலைக்க வேண்டும்

விஞ்ஞானம் விலை பேசா
விதி யது வேண்டும்
தூக்கமெனும் துய்யோன் அங்கு
தூங்காமல் சாமரம் வீச வேண்டும்
ஏக்கமது மாறாமல் என்றைக்கும்
நிம்மதியாய் கனவது வந்து
வந்து போக வேண்டும்

எழுதியவர் : ராதா (17-Nov-14, 11:52 pm)
பார்வை : 302

மேலே