கண்ணீரில் ஓர் கவிதை -கயல்விழி
கற்பனை என்னும்
அரும்பெடுத்து
உணர்வெனும் மலரில்
கவியெனும் மாலை செய்தோம்
உள்ளம் என்னும் கோயிலில்
உயிரெனும் தமிழில்
உலா வந்த
எழுத்தெனும்
இணையத்தில் சூடிவைத்தோம்
பெரியவர் சிறியவர்
கவிஞர்கள் கலைஞர்கள்
அனைவரும்
ஒற்றுமையின் சிகரங்களாய்
கூடி களித்திருந்தோம்
எவர் கண் பட்டதோ எங்கள்
கவி மாலைகளுக்கு
கவ்வி சென்றன கழுகுகள்
எங்கள் உணர்வினை உண்ணும்
கழுகுகளே
எங்கள் உதிரத்தை பருகி
பசியாறுங்கள்
மனித மாமிசம்
சுவை என்றால்
எங்கள் உடல்களை
அறுத்து உணவாக்குங்கள்
கவிகள் எங்கள் உயிர் அன்றோ
அதை அதை குடிக்கும்
நீங்கள் எமன் தானோ
மானம் உள்ள மனிதன்
என்றும்
மாற்றான் உணர்வினை
திருட மாட்டான்
மானம் என்பது இருந்ததென்றால்
நிறுத்திகொள்ளுங்கள் இத்திருட்டை
மகிழ்வாய் மீண்டும்
கவி படைக்க வழிகொடுங்கள்
இத் தளத்தில் ....
கற்பனை இல்லை இக்கவியில்
கண்ணீர் மட்டுமே என் வரியில்
பிழைகள் இருப்பின் பொருத்திடுவீர்
கவி படைத்து வாழ வாழ்த்திடுவீர்..!!