அன்போடு கேட்கின்றேன்

சிந்திக்கும் ஆற்றலோ ஒருவரிடம்
சிந்தாமல் திருடுவதோ வேறொருவர் !
நிந்திக்கும் உள்ளங்கள் கூடினாலும்
நித்தமும் செய்பவனோ அறிவிலியே !

படைக்கும் நண்பர்கள் படைப்பாளிகள்
படித்து திருடுபவனோ அறிவாளிகளா !
பதிவிடும் உரிமையோ நமக்குத்தான்
பதிவினை திருடுபவன் கள்வனல்லவா !

வடித்திட்ட உள்ளங்களோ கொதிக்குது
வந்திடுவான் இதனையும் பதிவிடவே !
துடித்திடும் நெஞ்சங்களோ கனலாகுது
துணிவோடு திருடுபவரோ திரிகின்றார் !

விதைகளை விதைத்தோர் நாமன்றோ
விளைச்சலை காண்போர் அவரன்றோ !
விஷமிகள் விளைவது விபரீதமன்றோ
விவரங்கள் அறிந்தோர் புரிந்திடுவீரோ !

அன்போடு கேட்கிறேன் தளத்தினைரை
பிழைப்பு நடத்தும் திருடிபிழைப்போரை
தழைக்காமல் செய்திடுவீர் இனியேனும்
நுழையாமல் தடுப்பீர் எழுத்து தளத்தில் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (20-Nov-14, 9:12 am)
பார்வை : 130

மேலே