கண் முன் இறந்தது நிலா

சிலைகள் பேசுகின்றன - 2
=========================

அவள் யாரோ ?
கும்மிருட்டில் காட்டு வழிப்பாதையில்
யார் துணையும் இன்றி
அமர்ந்திருக்கும் அந்த மங்கை யாரோ ?

துணை தேடி வந்திருப்பாளோ !
துணைக்காய் காத்திருக்க வந்திருப்பாளோ !
எதையும் நான் அறியேன்
எனினும் அவள் மனம் அறியும்

அவள் மனம் படிக்க
நான் என்ன கடவுளா ?
இல்லையே தூரத்தே நின்றிருக்கும்
அசைவற்ற சிலை

அவள் முகத்தை சற்று
உன்னிப்பாய் பார்க்கிறேன்
அந்த நிலா முகத்தில் சோகம்
அந்த கயல் கண்களில் கண்ணீர்

வானத்து நிலவை பார்க்கிறேன்
அது சோபை கொண்டது போல்
எனக்குத் தோன்றியது
இங்கே பூமியின் நிலா அழுகிறாள்

வானத்து நிலவுக்கென்ன வந்தது
அதோ அங்கே அவள் முகம்
கறுத்து விட்டது
அழத் தொடங்கி விட்டாள்

வானத்து நிலவின் கண்ணீர்
முழு காட்டையும் நனைக்கிறது
நானும் நனைகிறேன்
அந்த மங்கையும் நனைகிறாள்

சற்றென்று அவள் எழுகிறாள்
நீண்ட பெருமூச்சு விடுகிறாள்
அவள் கையிடுக்கில் ஏதோ
மின்னுகிறது . உற்றுப் பார்க்கிறேன்

நிலவின் கையில்
வால்வெள்ளி எதற்கு ?
பூமி நிலவின் கையில்
கத்தி எதற்கு ?

அடுத்து நடப்பதை
ஊகிக்கிறேன் ; பதறுகிறேன்
ஓடிச் சென்று அவளை தடுக்க
வேண்டும் என எண்ணுகிறேன்

நான் என்ன செய்ய
என் கால்களை என்னை
செதுக்கியவன் கட்டி விட்டானே !
அவள் கத்தியை வயிற்றுக்குள்
இறக்குகிறாள்

ஒ .... கத்தியே ! அவள்
இரத்தம் குடிக்க உனக்கு
பிரியமோ !

மங்கை விழுகிறாள் ; கீழே
விழுகிறாள் ; புயலில் சிக்குண்ட
மரம் போல் விழுகிறாள்

பல காட்சிகள் கண்ட நான்
முதல் தடவை
ரோஜாவில் நிலா உறங்குவதைப்
போல் இரத்தத்தில் அந்த
மங்கை மிதப்பதை கண்டேன்
தவித்தேன்

முதல் தடவை என் கல்
நெஞ்சத்திலும் துடிப்பு இருப்பதை
உணர்ந்தேன்

எழுதியவர் : fasrina (20-Nov-14, 11:43 am)
பார்வை : 84

மேலே