இயற்கை-தேவி

புத்தம் புது காலையில்
புதிய பயணம் போனேன்.

கண்கவர் மலர்கள் காண
விழி ஏங்கியது

வானுயர்ந்த மரம் காண
மனம் ஏங்கியது

வீசும் காற்றில்
கண்ணயர விழிகள் ஏங்கியது

துளிர்க்கும் மரங்களை
கோடாரி கொண்டு
கொன்று போடுபவர்களைதான்
கண்டேன்.

இன்ச் இஞ்சாக இப்படியே
கொன்றால்
இயற்கையும் ஒருநாள்
இயற்கை எய்திவிடும்.

அதை பார்த்து
கண்ணீர் சிந்த
மழையும் இல்லாமல் போகும் .

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (21-Nov-14, 10:24 am)
Tanglish : iyarkai
பார்வை : 206

மேலே