வணக் குறத்தி

ஐயோ சாமியோ
இங்குட்டு காட்டுக்குள்
எம்புட்டு அழகு.
குதிச்சிக்கிட்டு ஓடி
மறையுது முயலு...

ஆத்தா மகமாகி
கண் கொள்ளா
அழகு தாயி....

நீர் ஓடி நிலம்
பிளந்து நிலத்திலே
மறையுண்டு கிடக்கும்
கிழங்கை எடுத்து
போட்டால் வெந்து
விடும் மந்தை
மேய்க்கையிலே
தாயி......

குவா குவா
வாத்து இங்கிட்டு
வா வாத்து இந்தக் குமரியை
கொஞ்சம் பார்த்து.....

இந்தா இந்தா
மந்த இந்தப் பக்கம்
ஏன் வந்த....

கோர்த்த பாசி மணி
மாலையை
அள்ளிக் கொண்டு
ஐயனார் கோயிலில்
போட்டுப்புட்டு பக்கமாக
குந்திக்கிட்டு நான்...

குறி கேட்கவரும்
குமரன் கையைத்
தொட்டு குறி
சொல்லையிலே
அவன் அம்புட்டுப்
பார்ப்பான் என்னையல்லோ.....

அங்குட்டும் இங்குட்டும்
போவானுங்கோ
ஆத்தா மகமாரி
பார்த்தாலே பயம் தாயி....

எழுதியவர் : கவிக்குயில் இ.சாந்தகலா (21-Nov-14, 8:15 pm)
பார்வை : 100

மேலே