கை மாறிய காதல் கடிதம்

கை மாறிய காதல் கடிதம்!!!
அந்த கல்லூரியில் சேர்ந்து ஒரு மாதம் தான் இருக்கும்...தினமும் ஒரு கவிதைகளுடன் ஒரு காதல் கடிதம் அவளின் இருக்கையில் இருக்கும்...அதை எடுத்து படிக்கும் போது எல்லாம் அவன் யார் என்று தெரியாமல் தவிப்பாள் வசந்தி...
என் அருமை காதலியே
உன்னை பார்த்த நாள் முதல்
என் இதயம் என்னிடம் இல்லை
உன்னை என் மனம் மனசார
விரும்புகிறது...ஏனோ தெரியவில்லை...
இப்படியாக ஒரு கடிதத்தை கண்ட வசந்தி ஒன்றும் புரியாதவளாய் யோசிக்க தொடங்கினாள்..இது யாரா இருக்கும் ஒரு பிடியும் அவளுக்கு கிடைக்கவில்லை...
இது போலவே இன்னொரு கடிதம்...
என்ன வசந்தி என் வாழ்கையில்
ஒரு வசந்தமாக எனக்கு வசந்தி
எனக்கு கிடைப்பாளா?? எனக்கு
வசந்தியை வேண்டும்
சொல் உன் காதலை
சொல்லி விடு உன் காதலை
இதையும் படித்து விட்டு அவளுக்கும் குழப்பத்தை உண்டாக்கியது..இவன் யார் என்று தெரிய வேண்டும்..வசந்தியின் குழப்பம் மேலும் அதிகம் ஆகிறது
அதே போல் மீண்டும் ஒரு கடிதம்..
காலங்கள் மாறினாலும்
நான் உன் மீது வைத்துள்ள
காதல் மாறாது...நீ தான்
என்னவள் நீ இல்லாத
வாழ்க்கை எனக்கு இல்லை.
இப்படியாக தினம் தினம் ஒரு கவிதை நயங்களுடன்.....இந்த கவிதையெல்லாம் படிக்கும் போது வசந்திக்கு அவனின் கவிதையை காதலிக்க ஆரம்பித்தாள்...
வழக்கம் போல் அன்றும் ஒரு கடிதம் அவள் இருக்கையில் அவளுக்காக காத்திருந்தது...எடுத்து படித்து பார்த்தாள் வசந்தி....
அன்பே என்னை யார் என்று .
தெரியாமல் தவிக்கிறாய்
கூடிய விரைவில் என்னை
அடையாளம் காண்பிப்பேன்
அது வரை காத்திரு என்னை
யார் என்று தெரிந்ததால்
என்ன செய்வாய்?...உன் பதிலை
எனக்கு எழுதி உன் இருக்கையில்
வைத்து விடு தெரிந்து கொள்கிறேன்..
இதை படித்து பார்த்த வசந்தி அவனின் கவிதைக்கு கவிதையாக ஒரு கவிதை எழுத தொடங்கினால்..
என் இதயத்தில் குடி
வர காத்திருக்கும்
என்னவனே நான்
காதலிக்கிறேன் உன்
கவிதைகளை உன்னை
யார் என்று தெரியாமல்
உன்னிடம் எப்படி என்னை
கொடுப்பது முதலில் நான்
உன் உருவத்தை காணவேண்டும்
பின் உன் உள்ளத்தை காண வேண்டும் என்று ஒரு கடிதம் அவள் இருக்கையில் வைத்து விட்டு மறைந்து இருந்து பார்த்தாள்....வெகு நேரம் ஆகியும் யாரும் அந்த கடிதத்தை எடுக்கவில்லை....
இவளுக்கு அந்த கடிதத்தை அப்படியே விட்டு விட்டு போகவும் மனம் இல்லை...
அந்த நேரத்தில் தான் பிரகாஷ் அந்த இருக்கையின் அருகில் வந்து அந்த கடிதத்தை எடுத்து விட்டு வெளியே வந்தான்....
மனதில் லேசான திக்... திக்... உடன் அவனை அடையாளம் கண்ட வசந்திக்கு பதட்டத்துடன் மறைந்திருந்து பார்த்தவள்... மாறி போனாள்....
வழக்கம் போல் மறு நாளும் அவள் இருக்கையில் ஒரு கடிதம் காத்திருந்தது....படித்தாள் வசந்தி....
என் வசந்த மாளிகையே
உன் மாளிகையில் இடம்
இல்லாவிட்டாலும் உன்
வசந்த மாளிகை வாசலில்லாவது
இடம் தர மாட்டயா??? என்று
ஒரு கடிதம் இதை படித்து விட்டு பதிலுக்கு ஒரு கடிதம் எழுதினால் வசந்தி....
உன் அன்புக்கும் மட்டும் இன்றி
உன் கவிதைக்கும் நான் அடிமையானேன்
உன்னை பார்த்த அந்த நாள் முதல்
என் மனம் என்னை அறியாமல்
உன்னை நோக்கியே செல்கிறது
உன் கை பட்ட கடிதத்தின் வாசகம்
இல்ல வாசனையும் என்னை மிகவும்
கவர்ந்தது உன் பெயருக்கு ஏற்றார் போல்
நீ பிரகாசிக்கிறாய்..கவிதையில்..எப்போது இது போல்
நாம் இருவரும் பிரகாசிப்போம்...
இது படித்து விட்டு பிரகாஷிர்க்கும்...ஒன்றும் புரியவில்லை...என் பெயர் இவளுக்கு எப்படி???..ஆச்சரியம்...அவனை அலைகழிக்க வைத்தது....
என்னவளே என் பெயர் உனக்கு
எப்படி???என்ற கேள்வி குறி
என்னை உறுத்துகிறது..
என்னை அடையாளம் கண்ட
நீ ஏன் என்னை சந்திக்க விரும்பவில்லை
சந்திப்போமா???இன்று சந்திப்போமா?என்று முடித்த அந்த கடிதம் அவள் கைக்கு கிடைத்தது....
படித்து பார்த்த அவள்..
சந்திப்போம் இன்று அந்த கோவிலில்....
அந்த கோவில் அம்மன் முன்னிலையில்
நாம் முதல் சந்திப்பில் அம்மனின் அருள்
புரியட்டும்..வா....என்று எழுதி வைத்து விட்டு
அவர்களின் திட்ட படி அந்த கோவிலின் வாசலில் முதல் சந்திப்பு...
ஹாய் பிரகாஷ்....
ஹாய் வசந்தி...
என்ன நீ வந்திருக்கே...
வேற யாரா எதிர் பார்த்தீர்கள்?.
என்னவள்
யார்???
உன் தோழி வசந்த குமாரி...
என்ன என் தோழி வசந்த குமாரியா??
என்ன குழபுரிங்க....
அப்பா இதனை நாள் எழுதிய காதல் கவிதைகள் அவளுக்கா????
ஆம்மாம் என்பது போல் தலை அசைத்தான் பிரகாஷ்...
சொல்ல வார்த்தைகள் இல்லாமல் இரு வரும் பிரிந்த்தனர்.
கை மாறிய காதல் கடிதத்தால் இவர்களின் காதல் வாழ்கையில் ஒரு புது நட்பு கிடைத்தது...